புதுடெல்லி: கூகுள் தனது தொழில்நுட்பத்தை நாளுக்கு நாள் மேம்படுத்த முயற்சித்து வருகிறது. சமீபத்தில், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோயை துல்லியமாக அடையாளம் கண்டு பிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கூகிள், இப்போது மற்றொரு தொழில்நுட்பத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. 6 மணி நேரத்திற்கு முன்னதாக வானிலை குறித்த துல்லியமான தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக, இதுவரை நடைபெற்ற அனைத்து ஆராய்ச்சிகளும் மிகவும் நம்பிக்கைக்குரியவை என்பதை நிரூபித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AI உதவியுடன் துல்லியமான எச்சரிக்கைகள் பெறப்படுகின்றன:
சமீபத்தில் கூகுள் இந்த வாரம் ஒரு வலைப்பதிவு இடுகையில் புதிய ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொண்டது. இந்த ஆராய்ச்சியின் படி, கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் உதவியுடன் வானிலை முன்னறிவிப்பதில் மிகவும் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிமிடங்கள் கணக்கிட்ட பின்னரே 6 மணி நேரத்தில் மழை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது பின்னர் மிகவும் துல்லியமாகவும் சரியானதாகவும் மாறியது. 


விரைவில் கூகுளின் வானிலை முன்னறிவிப்புத் துறையிலும் இந்த ஆராய்ச்சியை கொண்டு வரப்போவதாக, இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வரும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நிறுவனம் தற்போதுள்ள கூகுள் சேவைகளில் இதை இன்னும் சேர்க்கவில்லை. ஆனால் விரைவில் இது தொடர்பான சேவையை உலகம் முழுவதும் கொண்டுவர முடியும். இந்த சேவையை கூகுள் நிறுவனம் வணிக மட்டத்திலும் தொடங்கும். வானிலை தொடர்பான தகவல்கள் விவசாயம் போன்ற துறைகளுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும்.


தற்போதைய வானிலை முன்னறிவிப்பில் தாமதம் ஏன்?
தற்போதைய சூழ்நிலைகளில், செலலைட்டிலிருந்து பெறப்பட்ட தரவு சூப்பர் கம்ப்யூட்டர்களின் உதவியுடன் செயலாக்கப்படுகிறது என்று கூகுள் அதிகாரிகள் கூறுகின்றனர். சரியான தகவல்களை பெறும் வரை அனைத்து செயல்முறைகளும் தாமதமாகும். எனவே இந்த சிக்கலான செயல்முறைகளையும் அகற்றவும், தற்போதுள்ள ரேடாரில் காணப்படும் தரவுகளின் அடிப்படையில் துல்லியமான தகவல்களை வழங்க முடியும் என்று கூகுள் கூறுகிறது. இதற்காக இதுவரை மேற்கொண்ட அனைத்து கணிப்பு முற்றிலும் துல்லியமானது என்பதை நிரூபித்துள்ளது எனக் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.