உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. ஆனால் தற்போது ப்ரத்தியேக செயலி ஏதும் இல்லாமல் கூகிள் பக்கத்தில் இருந்தே உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஏதுவாக புதிய வசதியை கூகிள் அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Order Online என்னும் இந்த புதிய வசதி மூலம் கூகிள் பக்கள் அல்லது கூகிள் மேப் பக்கத்தில் இருந்தே உணவுகளை பயனர்கள் ஆர்டர் செய்யலாம். இதற்காக 'Order Online' என்ற பட்டனை கூகுள் தேடல் மற்றும் கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் நிறுவனம், இந்த வசதியுள்ள உணவகங்களை தேடும்பொழுது, உபயோகிப்பாளர்களுக்கு, இந்த பட்டன் தென்படும் என குறிப்பிட்டுள்ளது.


தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இயக்கத்தில் உள்ள டோர்டேஷ் (DoorDash), போஸ்ட்மேட்ஸ் (Postmates), டெலிவரி.காம் (Delivery.com), ஸ்லைஸ் (Slice), சவ்நவ் (ChowNow) என ஐந்து டெலிவரி சேவைகளை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், நமக்கு தேவையான சேவை நிறுவனத்தை தேர்வு செய்து உணவுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


மேலும் இந்த ஆர்டர்களுக்கு 'Googl Pay' மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம் என்ற வசதியையும் ஏற்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.


தன் தளத்தை மாற்றி அமைத்துள்ள இந்த மிகப்பெரிய தேடல் தளமான கூகுள், மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் எளிதில் பயன்படுத்தும் வகையிலும் தளத்தை அமைத்துள்ளது.


இதேப்போல் இந்தியாவில் உள்ள புட் பாண்டா(Food Panda), சுவிக்கி(Swiggy), ஊபர் ஈட்ஸ்(Uber Eats), ஜோமாட்டோ(Zomato) ஆகிய தளங்கள் Order Online சேவையில் இணைந்து இந்தியாவில் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த ஆன்லைன் டெலிவிரி தளங்கள் PayTm செயலி மூலம் பணம் பெறும் வசதி கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் Order Online செயல்பாட்டிற்கு வந்தால் Google Pay பயன்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.