சாதனை படைத்தது மெஸ்ஸி, இம்பாப்பே மட்டுமல்ல... சுந்தர் பிச்சை ட்வீட்!
பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், மெஸ்ஸி, இம்பாப்பே மட்டுமல்ல கூகுள் நிறுவனம் ஒரு சாதனையை படைத்திருக்கிறது என அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற 2022 பிபா உலகக்கோப்பை தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 1978, 1986 உலகக்கோப்பை தொடருக்கு பின், சுமார் 36 ஆண்டுகளுக்கு கழித்து அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றிருக்கிறது.
மேலும், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது 26ஆவது உலகக்கோப்பை போட்டியை நேற்று விளையாடினார். அதன்மூலம், அதிக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி ஆண் வீரர் என்ற சாதனை பெற்றார். நேற்றைய இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அனைத்து நாக்-அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மெஸ்ஸி மட்டுமில்லாமல், பிரான்ஸின் இம்பாப்பேவும் இறுதிப்போட்டியில் 56 ஆண்டுகள் கழித்து ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார். இத்தொடரில் மொத்தம் 8 கோல்களை அடித்து கோல்டன் பூட் விருதையும் அவர் வென்றுள்ளார். இந்நிலையில், நேற்றைய போட்டியில், மெஸ்ஸி, இம்பாப்பே மட்டுமின்றி கூகுள் நிறுவனமும் ஒரு சாதனையை படைத்துள்ளது. இதை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில்,"கடந்த 25 வருட வரலாற்றில், அதிகம் பேர் ஒரே நேரத்தில் கூகுளை பயன்டுத்தியத்தியது 2022 பிபா உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில்தான். ஒட்டுமொத்த உலகமே அதை மட்டுமே தேடியுள்ளது போன்றிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அவர் அர்ஜென்டினாவின் வெற்றி குறித்தும் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில்,"இதுவரை நடந்த சிறந்த போட்டிகளில் ஒன்று. இரு அணிகளும் நன்றாக விளையாடின. மெஸ்ஸி விட வேறு யாரும் இந்த மாபெரும் வெற்றிக்கு தகுதிபெற்றவர் இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | FIFA World Cup 2022 Awards : முக்கிய விருதுகளை வென்றது யார்... யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ