கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டி
உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டி கத்தாரில் நடைபெற்றது. சரிசம்பலத்துடன் அர்ஜெண்டினாவும், பிரான்ஸூம் உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டதுக்காக மல்லுக்கட்டின. இறுதியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி கோப்பை தன்வசப்படுத்தியது. ஆனால், அவர்கள் அந்த கோப்பையை அவ்வளவு எளிதாக பெற்றுவிடவில்லை.
அச்சுறுத்திய எம்பாப்பே
2 கோல்கள் போட்டு ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த அர்ஜெண்டினா அணிக்கு, அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அதிர்ச்சி கொடுத்தவர் தான் எம்பாப்பே. இதனால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பில் இருந்த அர்ஜெண்டினாவுக்கு கடைசி கட்டத்தில் கிலியை ஏற்படுத்திவிட்டார். கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, பதிலுக்கு எம்பாப்பே ஒரு கோல் அடித்து சமன் செய்தார். உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
மேலும் படிக்க | CM Stalin: ஃபீபா உலகக்கோப்பை மகுடம் சூடிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்
அர்ஜெண்டினா சாம்பியன்
எம்பாப்பே எழுச்சியால் கால்பந்து இறுதிப் போட்டியில் தீப்பொறி பறக்கும் ஆட்டமாக மாறியது. இதனால், விழித்துக் கொண்ட அர்ஜெண்டினாவும் பதிலுக்கு சூப்பராக விளையாட ஆட்டத்தில் பொறி பறந்தது. நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த போட்டியில் பெனால்டி ஷூட்டில் வெற்றியை தன்வசப்படுத்தியது அர்ஜெண்டினா.
எம்பாப்பே கண்ணீர்
மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜெண்டினா வீரர்கள் வெற்றிக் களிப்பில் ஆனந்த கண்ணீர் வடிக்க, உலக கோப்பையை கைக்கு எட்டும் தூரத்தில் தொட்டுவிட்டு வந்த பிரான்ஸ் வீரர்கள் நொறுங்கிப் போனார்கள். அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே கண்ணீர் விட்டு அழுதார். ஹாட்ரிக் கோல் அடித்து மைதானத்தையே அனல் பறக்க வைத்த அவரால் தோல்வியை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
யார் இந்த எம்பாப்பே?
ஃபிஃபா உலகக் கோப்பை 2018-ல் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் குரோஷியாவை தோற்கடித்தபோது கவனத்தை ஈர்த்தவர் எம்பாப்பே. மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஜூனியருடன் இணைந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG)-க்கு ஸ்ட்ரைக்கராக விளையாடுகிறார். 2015-ல் மொனாக்கோ அணிக்காக அறிமுகமானார். 17 வயதில் தனது முதல் கோலை அடித்தார். இப்போது, நெய்மருக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது விலையுயர்ந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.
PSG கிளப் அணி
எம்பாப்பே தந்தை கால்பந்து கிளப்பில் பயிற்சியாளர். இதனால் கால்பந்து என்பது எம்பாப்பே ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. 2011-ல் Clairfontaine Growth என்ற பிரெஞ்சு கால்பந்து அகாடமியில் சேர்ந்தார். அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டு அவரை PSG கிளப் அணி 180 மில்லியன் யூரோக்கள் ஒப்பந்தத்தில் தங்கள் வசப்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதால், இந்த ஜாக்பாட் எம்பாப்பேவுக்கு அடித்தது.
எம்பாபே மொத்த வருமானம்
கால்பந்து உலகில் அதிகம் சம்பாதிக்கும் மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகிய நட்சத்திர வீரர்களின் பட்டியலில் எம்பாபே இருக்கிறார். இவரின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் 125 மில்லியன் யூரோக்கள் என கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் அவரின் நிகர மதிப்பு 44 மில்லியன் யூரோ என போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
நிகர மதிப்பு
பிரான்ஸ் கால்பந்து வீரர் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ போன்றவர்களை நிகர மதிப்பின் அடிப்படையில் பின்தள்ளியதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. அவரது மொத்த வருமானம் சுமார் 125 மில்லியன் யூரோக்கள் குவிந்துள்ளது. மே 2022 இல், ஃபோர்ப்ஸ் மே 2022 இல் Mbappe இன் நிகர மதிப்பை €44 மில்லியன் என பட்டியலிட்டது, இது PSG உடனான அவரது புதிய ஒப்பந்தத்திற்கு முன் வந்தது.
மேலும் படிக்க | FIFA World Cup 2022 Awards : முக்கிய விருதுகளை வென்றது யார்... யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ