Google Tensor chip: Pixel 6, 6 Pro இன் முழு விவரம் இங்கே!
Pixel 6 மற்றும் Pixel 6 Pro மாடல்கள் ஆனது Google நிறுவனத்தின் கஸ்டம் சிப்செட் ஆன Tensor மூலம் இயங்கப்படும்.
கூகிள் தனது அடுத்த முன்னணி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது- அவை Pixel 6 மற்றும் Pixel 6 ப்ரோ ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் ஒரு கேமரா பட்டியில் ஒரு புதிய வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் கூகிள் தனது சொந்த சிப்- கூகுள் டென்சரை-- ஒரு பிக்சல் போனில் பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
அதன்படி பிக்சல் 6 (Pixel 6) மற்றும் பிக்சல் 6 ப்ரோ உள்ளிட்ட வரவிருக்கும் பிக்சல் 6 சீரிஸ் போன்களின் சில முக்கிய விவரங்களை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்போம். பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் மூன்று வெவ்வேறு வண்ண (ஆரஞ்சு, வெளிர் கருப்பு மற்றும் வெளிர் மஞ்சள்) வகைகளில் வருகிறது. மேலும் இந்த போன்களின் வடிவமைப்பு ஆனது முன்னதாக ஆன்லைனில் வெளியான லீக்ஸ்களில் காணப்பட்டதை போலவே உள்ளதாக பலர் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.
ALSO READ | Be Aware! பழைய ஆண்ட்ராய்ட் போன்கள் மூலம் இனி Google செய்ய முடியாது
கூகுள் (Google) வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்புகளில் ஒன்று கூகுள் டென்சர் ஆகும். கூகுள் டென்சர் என்பது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு SoC ஆகும். கூகுள் பிக்சல் 6 சீரிஸ் போன்கள் இந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் வெளியிடப்படும் மற்றும் அது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-இல் இயங்குகிறது.
கூகுள் பிக்சல் 6 ப்ரோ பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் அமைப்புடன் 4x ஆப்டிகல் ஜூம் திறன் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது. கூகுள் டென்சர் சிப்செட் கூகுளின் மிக சக்திவாய்ந்த இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை நேரடியாக பிக்சல் 6 தொடர் போன்களில் செயலாக்க முடியும். கூகுள் பிக்சல் 6 சீரிஸில் அதிக அடுக்கு வன்பொருள் பாதுகாப்பைக் கொண்டுள்ளன. கூகுள் டென்சர் சிப்செட்களால் இயக்கப்படும் பிக்சல் 6 தொடர் இந்த இலையுதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ALSO READ | Google Search: உங்கள் தேடலில் தேவையானதை துல்லியமாக பெற சில டிப்ஸ்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR