டோக்கியோ: புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அடுத்த ஃப்ளேக்ஷிப் போனான Pixel 6-ஐ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. Pixel 6-இன் படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இப்போது கூகிள் நிறுவனம் கூகுள் ஒரிஜினல் சிப்சையும் (Google Chips) விற்பனை செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கூகுள் முதன்முறையாக ஸ்மார்ட்போன் சிப்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் டென்சர். இப்போது இந்த சிப்செட் தான் Pixel 6 தொடரில் காணப்படும்.


கூகிள் நிஜமாகவே சிப்ஸ் விற்கிறதா?  


சிப் மற்றும் சிப்சுக்கு இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இரண்டு வார்த்தைகளும் கேட்கும் போது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தைப் பயன்படுத்திக் கொள்ளதான் நிறுவனம் தயாராகி வருகிறது. கூகுளின் பிக்சல் 6 சீரிஸில் ஒரு புதிய சிப்செட் வரவிருக்கிறது. ஆகையால் நிறுவனம் அதன் புதிய சிப்செட்டை விளம்பரப்படுத்த வேண்டும். 


அதனால்தான் பிக்சல் 6 ஐ மேலும் மேலும் பிரபலமாக்கும் பொருட்டு கூகுள் இந்த தந்திரத்தை பின்பற்றுகிறது. ஜப்பானில், கூகிள் (Google) நிறுவனம் பிக்சல் 6 இன் விளம்பரத்திற்காக, உண்மையான சிப்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் அங்கு உருளைக்கிழங்கு சிப்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் அதன் டென்சர் சிப்செட்டை முன்னிலைப்படுத்தியுள்ளது.


ALSO READ: Google, Amazon, Facebook-க்கு அதிர்ச்சி: புதிய கட்டண தளத்துக்கு தடை விதித்தது RBI


பிரச்சாரங்களும் நுட்பங்களும்


கூகிளின் சிப்ஸ் பாக்கெட்டும் பிக்சல் 6 தொடரின் அதே நிறத்தில் உள்ளது. Pixel 6-ன் பின்புற பேனல் அதே வண்ண வடிவமைப்பில்தான் இருக்கும். ஐந்து வண்ணங்களில் கூகிள் சிப்ஸ் பாக்கெட்டுகளை கூகுள் தயார் செய்துள்ளது. நிறுவனம் 10,000 சிப்ஸ் பைகளை தயாரித்துள்ளது. இவை இந்தியாவில் கிடைக்கவில்லை. ஏனென்றால், இந்தியாவில் கூகுள் தனது லேட்டஸ்ட் பிக்சல்களை அறிமுகம் செய்வதில்லை.


வாடிக்கையாளர்களை சென்றடைய கூகுள் இத்தகைய தந்திரங்களை பின்பற்றுகிறது


இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் இவை உப்பு சுவை கொண்டவை, அதாவது சால்டி என எழுதப்பட்டுள்ளது. அதற்கு கீழே 'Google Pixel Coming Soon' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வகையில், நிறுவனம் தனது தொலைபேசியை விளம்பரப்படுத்தும். ஜப்பானில், கூகுளின் சிப்ஸின் பாக்கெட்டை தனிப்பயனாக்கும் விருப்பத்தையும் கூகுள் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, மக்கள் தங்கள் பெயர்களை சிப்ஸ் பாக்கெட்டின் பக்கவாட்டு பகுதியில் அச்சிடலாம்.


ஆப்பிள் நிறுவனத்திற்கு கூகுள் சரியான போட்டி


பிக்சல் 6 தொடரில் கொடுக்கப்பட்ட டென்சர் சிப்செட் பற்றி பேசுகையில், இந்த முறை இந்த சிப்செட் மூலம் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிட கூகுள் தயாராகி வருகிறது. ஏனென்றால் ஆப்பிள் (Apple) ஏற்கனவே தனது ஐபோனில் தனது சொந்த சிப்செட்டை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: iPhone 13 series: ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR