iPhone 13 series: ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 08:11 AM IST
  • ஐபோன் 13 தொடரை அறிமுகம் செய்துள்ளது.
  • புதிய மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது.
  • ஆப்பிள் ஐபேட் மினி 4 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
iPhone 13 series: ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம் title=

புது டெல்லி: ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 தொடரை அறிமுகம் செய்துள்ளது.  இந்தத் தொடரில் iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max ஆகியவை அடங்கும். புதிய மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது.

என்னென்ன அறிமுகம்:
*  ஆப்பிள் (Apple) டிவி பிளஸ் அறிமுகத்துடன் துவங்கியது. 
* ஐபேட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. 
* ஆப்பிள் ஐபேட் மினி (iPhone 13 Mini) அறிமுகம் செய்யப்பட்டது. 
* ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் (iPhone 13 Series) அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் அதிநவீன கேமரா அம்சம், அதிக சக்தி, மிரட்டலான செயல்திறன் உடன் பல விதமான புதிய மேம்படுத்தலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | Apple iPhone 13; வெளியீட்டு தேதி, விலை, அம்சங்கள்!

ஆப்பிள் டிவி பிளஸ்: 
புதிய டிவி தொடர்களுடன், திரைப்படங்களுடன் ஆப்பிள் டிவி பிளஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக டிம் தெரிவித்தார்.

ஐபேட் சாதனம்: 
புதிய ஐபேட் சாதனம் 40% மேம்படுத்தலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் மினி: 
ஆப்பிள் ஐபேட் மினி 4 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் அம்சங்களை 40 முதல் 80% வரை மேம்படுத்தியுள்ளது. இது 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு பின்பக்க லென்ஸ் உடன் டச் இடி ஆதரவை ஆதரிக்கிறது. இதன் விலை $499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7: 
புதிய அம்சங்களுடன் பெரிய முழு டிஸ்பிளே ஆதரவுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஸ்லிம் வடிவத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவசர உதவி அம்சத்துடன், புது வாட்ச் பேஸ், முழு கீபோர்ட் போன்ற ஏராளமான புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் மிகுந்த உறுதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 33% வேகமான பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் டைப் சி சார்ஜ்ரை ஆதரிக்கிறது. இந்த முறை $399 விலையில் ஆரம்பமாகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ்: 
ஐபோன் 13 மூன்று சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. இந்தியாவில் 128GB விலை ரூ .79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 256GB மற்றும் 512GB சேமிப்பு விருப்பங்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 256GB சேமிப்பு வகைக்கு இந்தியாவில் ஐபோன் 13 விலை ரூ .89,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் 512GB ரூ .1,09,900 க்கு ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

ஐபோன் 13 அடிப்படை மாடலுக்கு அமெரிக்காவில் $ 799 (தோராயமாக ரூ. 58,800) விலை உள்ளது. சாதனம் ஐந்து வண்ணங்களில் வருகிறது - இளஞ்சிவப்பு, நீலம், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ப்ராடக்ட் (RED).

ஐபோன் 13 விவரக்குறிப்புகள்: 
இந்த புதிய ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி பற்றிப் பார்க்கையில், ஐபோன் 13 மினியில் 2.5 மணி நேர பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி ஆயுளை பாதுகாக்க ஸ்மார்ட் டேட்டா மோடு அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 மினி $699 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் $799 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 இரட்டை சிம் வசதி கொண்டது. இரண்டு சிம் கார்டுகளும் ஜிஎஸ்எம் ஆதரவை ஆதரிக்கிறது. இது ஒரு 5ஜி சாதனம் ஆகும். ஐபோன் 13 இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac/arm, ஜிபிஎஸ், என்எப்சி, லைட்னிங், 3G, மற்றும் 4G ஆகியவற்றை ஆதரிக்கிறது.

ALSO READ | 1TB Internal Storage கொண்ட Smartphone, விரைவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News