கூகுள் எடுத்த அதிரடி முடிவு - செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம்: ஊழியர்கள் வேதனை
கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் வகையில் ஊழியர்களுக்கு வழங்கி வந்த தின்பண்டங்கள் மற்றும் சலவை சேவைகள், மதிய உணவுகள் உள்ளிட்ட பல சலுகைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் கூகுள், தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வந்தது. இதனால் இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே ஐடியில் பணியாற்றும் இளைஞர்களின் கனவு. ஆனால், அந்த நிறுவனம் அண்மைக் காலமாக எடுத்து வரும் சில அதிரடி நடவடிக்கைகள் கூகுள் நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்களுக்கே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் அண்மையில் ஆட்குறைப்பை செய்த கூகுள் அடுத்ததாக ஊழியர்களின் சலுகைகளில் கை வைத்துள்ளது. ஆடம்பரச் செலவுகளை குறைக்கும் பொருட்டு இத்தனை நாள் ஊழியர்களுக்கு வழங்கி வந்த பல்வேறு சலுகைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | PPF-சுகன்யா சம்ரிதி விதிகளில் பெரிய மாற்றம், நிதி அமைச்சர் புதிய உத்தரவு
அதன்படி, ஊழியர்களுக்கு வழங்கி வந்த நொறுக்குத் தீனிகள், தின்பண்டங்கள் மற்றும் சலவை சேவைகள், மசாஜ், மதிய உணவு ஆகியவற்றை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இன்னும் சில சலுகைகளும் குறைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது கூகுள். இது அந்நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது குறித்து கூகுளின் தலைமை நிதி அதிகாரி ரூத் போர்ட் பேசும்போது, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் நிதியை பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மடிக்கணிணிகளுக்கான தனிப்பட்ட செலவுகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாகவுத் ஊழியர்களுக்கு கூகுள் மெயில் அனுப்பியிருக்கிறது.
மேலும் அந்த மெயிலில் குறைந்தளவு பயன்படுத்தப்படும் மைக்ரோ கிச்சன் மூடப்படும், உடற்பயிற்சி வகுப்பு அட்டவணைகள் மாற்ற நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு திண்பண்டங்கள் மற்றும் சலவை சேவைகள், மசாஜ், மதிய உணவு ஆகியவற்றில் உலகளவில் கூகுள் நிறுவனம் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கூகுள் எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் ஊழியர்கள் மற்றும் புதிதாக பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்க தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் அதனைப் பற்றி நாங்கள் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்திருக்கும் கூகுள், நிதியை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதே தங்களின் இலக்கு என கூறியுள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 7 விதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ