பிரபல தேடுபொறி நிறுவனமான கூகிளின் Gboard விசைப்பலகையில் stickers, emoji மற்றும் GIF வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக கூகிள் நிறுவனம் தெரிவிக்கையில்... Gboard பயனர்கள் தொடர்ந்து பதிவேற்றி வரும் stickers, emoji மற்றும் GIF ஆகியவை நிகழ்நேரத்தில் உடனடியாக Gboard நினைவகத்தில் பதிவேற்றப்படுகிறது. இதன் காரணமாக Gboard பயனர்கள் ஒரு தட்டல் வசதியில் stickers, emoji மற்றும் GIF ஆகியவற்றினை பயன்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளது.


மேலும் இந்த Gboard விசைபலகை ஆனது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு செயல்படுவதால் stickers, emoji மற்றும் GIF ஆகியவற்றினை தேர்ந்தெடுப்பதில் பயனர்களுக்கு பெரிதும் உதவும் எனவும் கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் பயனர்கள் தங்களது உணர்வுகளை மிக விரைவில் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிராலாம் எனவும் கூகிள் குறிப்பிட்டுள்ளது.


இந்த GIF வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் Gboard-ன் மேல் தலைப்பபின் இடது ஓரத்தில் குறியீட்டினை அழுத்தினால் போதும். பயனர்களுக்கு பல GIF, stickers, emoji ஆகியவை காண்பிக்கப்படும். இவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.


மேலும் இந்த Gboard-ல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஸ்டிக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட உரிமையினை பாதாக்காகும் வகையில் மூன்றாம் பயனருக்கு தெரியபடுத்தாது எனவும் கூகிள் உறுதியளித்துள்ளது.


இந்த GIF, stickers, emoji வசதியானது ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தேவையினை விரும்பி விரைவில் மற்ற மொழிகளிலும் அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.