கூகிள்-ன் புதிய பண பரிவர்த்தனைச் செயலி!
இணைய தேடல் ஜாம்பவனான கூகிள், UPI-அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண செயலியை(Tez), இன்று(திங்கள்) தொடங்கியது.
இந்த செயலியானது, பயனர்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள், சேவைகளுக்கு பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலும் தனிநபர் - தனிநபர் பணம் பரிவர்த்தனை செய்ய வழிவகுக்கின்றது.
கூகிள் Tez ஆனது NPCI, BHIM செயலிகளைப் போலவே ஒப்பான அமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த செயலியை உருவாக்க தற்போது கூகிள் தேசிய கொடுப்பனவு கழகதுடன் வேலை செய்து வருகிறது.
இந்த செயலியானது அனைத்து முன்னனி வங்கிகளுடனும் இனைப்பினைக் கொண்டுள்ளது. எனவே தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு காலதாமதம் ஏற்படுதலுக்கான வாய்ப்புகற் மிகவும் குறைவாகும்.
தற்பொழுது ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கூகிள் Tez தனது சேவையினை வழங்குகின்றது.