இர்மா சூறாவளி பாதிக்கப் பட்டவர்களுகாக கூகிளின் புதிய முயற்சி!
இர்மா சூறாவளி கரீபியன் மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதி சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரிபிய தீவுகளை கடுமையாக தாக்கிய இர்மாவில் இருந்து மில்லியன் கணக்கான மக்களை காப்பதன் ஒரு முயற்சியாக கூகிள் நிறுவனம் தனது பங்களிப்பினை அளிக்கும் வகையினில் ’SOS Alerts’ எனப்படும் அவசர எச்சரிக்கை சேவையினை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு முயற்சியாக இர்மாவில் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 1 மில்லியன் டாலர் வரை நன்கொடைகளை திரட்டவும், கூகிள் தொடர்ந்து தனது SOS விழிப்பூட்டல்களை புதுப்பித்து வருகிறது.