விளம்பரத்துக்கு ’நோ’ சொல்ல கூகுளின் புதிய திட்டம்
ஆண்டிராய்டு செல்போன்களில் உள்ள செயலிகளில் தோன்றும் விளம்பரங்களுக்கு நோ சொல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டிராய்டு செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல்களில் இருக்கும் செயலிகளை உபயோகப்படுத்தும்போது விளம்பரங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது பலருக்கும் அசௌகரியமாக இருக்கும் சூழலில், இதற்கான புதிய திட்டம் ஒன்றை கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டிராய்டு யூசர்கள் விளம்பரம் இல்லாமல் செயலிகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Amazon Fab Phone Fest: வெறும் 20 ஆயிரத்துக்கு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்
Play Pass என்ற சந்தா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் இந்த சந்தா சேவை மாதம் 99 ரூபாய் அல்லது வருடத்துக்கு 899 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த சந்தா சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகளில் மற்றும் கேம்களில் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
கூகுள் இந்தியாவின் பிளே பார்ட்னர்ஷிப் இயக்குநர் அதித்யா சுவாமி பேசும்போது, ஆன்டிராய்டு செயலிகளை பயன்படுத்தும் யூசர்கள் அற்புதனமான அனுபவங்களை பெறும் வகையில் இந்த முயற்சியை கூகுள் எடுத்திருப்பதாக கூறினார். மேலும், கூகுள் பேம்லி பேக்கில் பிளே பாஸ் சந்தாவை 109 ரூபாய்க்கு குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனக் கூறியுள்ள அவர், உள்ளூர் டெவலப்பர்களுடன் இணைந்து இந்த தளத்தை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கூகுளின் இந்த திட்டத்தில் இன்னும் சில செயலிகள் அடுத்தடுத்த நாட்களில் இணைக்கப்படும் என்றும் ஆதித்யா சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Astronomers belief: மழை... மழை! இது நகை மழை! மழையாய் பொழியும் ஆபரணங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR