புதிய கொள்கை குறித்து வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு, ஒருதலைபட்ச மாற்றங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறியுள்ளது. இதனால், அதன் தனியுரிமை விதிமுறைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை திரும்பப் பெறுமாறு மத்திர அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் கேத்தார்ட்டுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.


WhatsAPP சேவை மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இந்தியர்கள் தரவுகள் திருடப்படும் என்பது குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்களை வாபஸ் பெறவும், தகவல் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கூறியது. அந்த கடிதத்தில் இந்தியர்கள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், தனியுரிமை சேவை விதிமுறைளில் ஒருதலைப்பட்சமாக செய்யப்படும் எந்த ஒரு மாற்றமும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல நியாயமானதல்ல என்றும் கூறியுள்ளது.


ALSO READ | PUBG Mobile India நாளை தொடங்கப்படுமா? உண்மை நிலை என்ன?


வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து ஜனவரி 21 ம் தேதி நடைபெறும் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். 
இக்கூட்டத்தில், மக்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்கும் உரிமை குறித்து பேஸ்புக் (Facebook) மற்றும் ட்விட்டர் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்படும். டிஜிட்டல் உலகில் பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து சமூக மற்றும் ஆன்லைன் செய்தி ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன


வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் (Delhi High Court)  திங்கள்கிழமை விசாரித்தது. உங்கள் தனியுரிமை பாதிக்கப்படுகிறது என்ற சந்தேகம் இருந்தால், உங்கள் மொபைலில் இருந்து வாட்ஸ்அப்பை நீக்குங்கள் என்று நீதிமன்றம் கூறியது. வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தனியுரிமை மீறல் என்று மனுதாரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.


வாட்ஸ்அப் போன்ற தனியார் செயலிகள் பயனர்கள்  தொடர்பான தனிப்பட்ட தகவல்களைப் பகிர விரும்புகின்றன, இதனை நிறுத்த வேண்டும் என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வலுவாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இது ஒரு தனியார் செயலி என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது, உங்கள் தனியுரிமை பாதிக்கப்படுகிறதென்றால், நீங்கள் வாட்ஸ்அப்பை நீக்கலாம் என கருத்து தெரிவித்தது


ALSO READ | WhatsApp-ற்கு மாற்றான Threema. இதுக்கு நாங்க கியாரண்டி என்கின்றனர் தீவிரவாதிகள்..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR