இந்திய அரசு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  இதற்கு முன்னரே இந்திய அரசு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அரசு மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் விண்டோஸ் பிசி-உடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது, இருப்பினும் பலர் அதை கூகுள் குரோம் பதிவிறக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  கூகுள் குரோமுடன் ஒப்பிடும் போது மைக்ரோசாஃப்ட் எட்ஜின் பயனர் தளம் மிகவும் குறைவாக இருந்தாலும், க்ரியேட்டிவான அலெர்ட்டுகள் மற்றும் பாப்-அப்கள் மூலம் இது மேம்பாடு அடைந்து வருகின்றது.  கடந்த சில ஆண்டுகளில் நிறுவனம் குரோமியம் அடிப்படையிலானது தளத்தை மேம்படுத்தி இருக்கிறது, மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயன்பாட்டை வழங்கும் வகையிலும், புதிய மேம்பட்ட அம்சங்களை வழங்கும் நோக்கிலும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?


சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன்களை பயனர்கள் பயன்படுத்துமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றது.  இருப்பினும் ஒரு சில பயனர்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக பழைய வெர்ஷனை பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.  ஆனால் பழைய வெர்ஷன் பயன்படுத்துது அவ்வளவு பாதுகாப்பான வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, இதுபோன்ற சில பாதிப்புகள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்-ல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்திய அரசாங்கம் 110.0.1587.41க்கு முந்தைய எட்ஜ் பிரவுசர் வெர்ஷன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) மைக்ரோசாஃப்ட் எட்ஜில் சில பாதிப்புகள் இருப்பதை கண்டறிந்து பதிவு செய்துள்ளது.  இதனால் ரிமோட் தாக்குபவர் சேவை மறுப்பு (DoS), ரிமோட் கோட் செயல்படுத்தல், சிறப்புரிமையை உயர்த்துதல், பாதுகாப்புக் கட்டுப்பாடு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.


CERT-Inன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மேற்கண்ட பாதிப்புகள் அனைத்தும் மைக்ரோசாஃப்ட் எட்ஜில் இருப்பது தெரிய வந்துள்ளது.  இது ரிமோட் தாக்குபவர் சேவை மறுப்பு (DOS), ரிமோட் கோட் செயல்படுத்தல், சிறப்புரிமையை உயர்த்துதல், பாதுகாப்பு கட்டுப்பாடு பைபாஸ், இலக்கு கணினியில் தகவல் வெளிப்படுத்தல் நிலைமைகளை தூண்டுவதற்கு அனுமதிக்கலாம்.  நீங்கள் எந்தவொரு மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் மைக்ரோசாஃப்ட் செக்யூரிட்டி புல்லட்டின் குறிப்பிட்டுள்ளபடி பயனர்கள் பொருத்தமான இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: மொபைலில் சார்ஜ் விரைவில் காலியாகிறதா? இந்த ஆப்ஸ்லாம் உடனே டெலீட் பண்ணிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ