ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை: எச்சரித்த மத்திய அரசு
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள், அந்த பதிவுகளை போடும் கணக்குகளை நீக்காவிட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.
புதுடெல்லி: மக்களவை தேர்தல் வர உள்ளதால் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய தொழில்நுட்ப துறை மற்றும் இந்திய சட்டத்துறை கடிதம் எழுதியது.
ஆனால் சர்ச்சைக்குரிய பதிவுகளை குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் ட்விட்டர் நிறுவனம் மேற்க்கொள்ளவில்லை. மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ட்விட்டர் நிறுவனம் கண்டுகொள்வதாக தெரிவில்லை.
இதனால் தொழில்நுட்பட்ப சட்டம் 69A படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சட்டம் மூலம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.