புது தில்லி: இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக அதிகரித்து வருகின்றது. பல புதிய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், Evtric மோட்டார்ஸ் தனது புதிய மூன்று மின்சார இரு சக்கர வாகனங்களை (Electric 2 Wheelers)இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முதலாவது அதிவேக மின்சார மோட்டார் சைக்கிள். இதன் பெயர் ரைஸ் ஆகும். அதைத் தொடர்ந்து மைட்டி மின்சார ஸ்கூட்டரும் பின்னர், இறுதியாக எவ்ட்ரிக் ரைடு புரோ ஸ்கூட்டர் வருகிறது. 


இந்த மின்சார இரு சக்கர வாகனங்கள் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடந்து வரும் EV இந்தியா எக்ஸ்போ 2021 இல் வெளியிடப்பட்டன. எவ்ட்ரிக் ரைஸ் மின்சார பைக்கில் 3.0 கிலோவாட்-ஆர் லித்தியம்-அயன் பேட்டரி பேக் கிடைக்கிறது. இதை பைக்கிலிருந்து தனியாக பிரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கிமீ வரை இயக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ என்று கூறப்படுகிறது.


இந்நிறுவனம் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்டுள்ளது.


இ-மோட்டார் சைக்கிள் தவிர, Evtric மோட்டார்ஸ் மைட்டி மற்றும் ரைடு ப்ரோ ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ரைடு ப்ரோ ஒரு அதிவேக இ-ஸ்கூட்டராகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிமீ ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிமீ வரை செல்லும். 


ALSO READ | E-Ashwa: EV சந்தையில், மிகக்குறைந்த விலையில் அட்டகாசமாய் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்கூட்டர்


இதற்குப் பிறகு மைட்டி அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகம் கொண்டது. இதை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 90 கிமீ வரை செல்லும். இந்த நிறுவனம் நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்டுள்ளது.  மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த நெட்வொர்க்கை 150 புள்ளிகளாக விரிவுபடுத்துவது குறித்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


மின்சார வாகனங்களை (Electric Vehicles) சந்தையில் கொண்டு வர Evtric குழு  கடுமையாக உழைத்தது - மனோஜ் பாட்டீல்


அறிமுகம் குறித்து Evtric மோட்டார்ஸ் நிறுவனர் மற்றும் எம்.டி., மனோஜ் பாட்டீல் கருத்துத் தெரிவிக்கையில், “எவ்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம், EV இருசக்கர வாகனத் தொழிலை வளர்ச்சியடையச் செய்வதற்கும் மாற்றுவதற்கும் தரமான மின்சார வாகனங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளது. EV India Expo 2021, சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதில் உற்பத்தியாளர்கள், பார்வையாளர்கள், வாகன வல்லுநர்கள் மற்றும் பயனர்களின் கவனமும் பாராட்டும் பாராட்டப்படுகிறது. சந்தையை ஆழமாக ஆய்வு செய்த பிறகே இந்த மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்." என்று கூறினார்.


ALSO READ | Best Electric Scooter PURE EV EPluto வந்துவிட்டது: இதைவிட சிக்கனமான ஸ்கூட்டர் இருக்க முடியாது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR