Best Electric Scooter PURE EV EPluto வந்துவிட்டது: இதைவிட சிக்கனமான ஸ்கூட்டர் இருக்க முடியாது

ஒன்றரை லிட்டர் பெட்ரோலின் விலையை விட குறைவான செலவில் இந்த ஸ்கூட்டரை மாதம் முழுவதும் இயக்க முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 05:29 PM IST
  • எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் தற்போது மின்சார வாகனங்களுக்கான மோகம் அதிகரித்து வருகிறது.
  • பெரிய நிறுவனங்கள் இப்போது மின்சார வாகனங்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
  • Pure EV சமீபத்தில் ஒரு சக்திவாய்ந்த மின்சார ஸ்கூட்டரான ePluto 7G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Best Electric Scooter PURE EV EPluto வந்துவிட்டது: இதைவிட சிக்கனமான ஸ்கூட்டர் இருக்க முடியாது  title=

PURE EV EPluto: எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் தற்போது மின்சார வாகனங்களுக்கான மோகம் அதிகரித்து வருகிறது. பல பெரிய நிறுவனங்கள் இப்போது மின்சார வாகனங்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

மின்சார கார்கள் (Electric Cars) மட்டுமல்லாமல் மினசார இரு சக்கர வாகனங்களும் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. 

Pure EV சமீபத்தில் ஒரு சக்திவாய்ந்த மின்சார ஸ்கூட்டரான ePluto 7G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது மிகவும் சிக்கனமான ஸ்கூட்டராக உள்ளது. ஒன்றரை லிட்டர் பெட்ரோலின் விலையை விட குறைவான செலவில் இந்த ஸ்கூட்டரை மாதம் முழுவதும் இயக்க முடியும். ஆம்!! இது உண்மைதான்!! 

இந்த ஸ்கூட்டரை இயக்க மாதம் முழுவதும் எவ்வளவு செலவாகும்?

Pure EV E Pluto 7G என்ற இந்த ஸ்கூட்டரை (Electric Scooter) ஒருமுறை சார்ஜ் செய்தால், 120 கிமீ வரை இதை இயக்கலாம். அதாவது, இதை இயக்குவதற்கான செலவு, ஒரு கிலோமீட்டருக்கு 28 பைசா மட்டுமே ஆகும். 

ALSO READ | Greta: அட்டகாசமான அம்சங்களுடன் அசத்தல் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் 

நீங்கள் தினமும் இந்த ஸ்கூட்டரில் 20 கிமீ பயணம் செய்தால், ஒரு நாளில் உங்களுக்கு ஆகும் செலவு வெறும் ரூ.5.60 மட்டுமே. இந்த வகையில், இந்த மின்சார ஸ்கூட்டரை மாதம் முழுவதும் சார்ஜ் செய்வதற்கு வெறும் ரூ.156 மட்டுமே செலவாகும். 

மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன

டெல்லியில் இந்த மின்சார ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.83,701 ஆகும். இது தவிர, வங்கிகளின் சலுகைகளும் இதில் உள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டரை ரூ. 3,000-க்கான மாதாந்திர EMI-யில் வாங்கலாம். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் மத்திய அரசைத் தவிர தங்கள் சார்பாகவும் மானியம் (Subsidy) வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த அம்சங்களைக் கொண்ட ஸ்கூட்டர்

- இந்த ஸ்கூட்டரின் அம்சங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.

- ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 முதல் 120 கிமீ வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

- இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் 60 கிலோமீட்டர் ஆகும்.

- இதன் எடை 76 கிலோ.

- இந்த ஸ்கூட்டரை நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம்.

- இது சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.

ALSO READ | Bounce Infinity: வெறும் ரூ. 36,000-க்கு அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News