ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ (Vivo) டிசம்பர் 22 அன்று சீனாவில் Vivo S12 மற்றும் S12 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் S12 தொடரின் வடிவமைப்பு மற்றும் அதன் வண்ண வகைகளைக் காண்பிக்கும் வீடியோவை வெளியிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவைச் சேர்ந்த ஒரு டிப்ஸ்டர், S12 Pro ஸ்மார்ட்போனின் (Smartphone) முக்கிய விவரக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். S12 தொடர் தங்கம், நீலம் மற்றும் கருப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. S12 மற்றும் S12 Pro ஆகியவற்றில், டிஸ்பிளேவில், டூயல் ஃப்ரண்ட் பேசிங் கேமராவுக்காக, ஒரு நாட்ச் அம்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வெணிலா மாடலில் ஃப்ளாட் ஸ்கீரின் இருக்கும் என்றும் ப்ரோ மாடலில் கர்வ்ட் எட்ஜ் டிஸ்பிளே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. விவோ எஸ்12 ப்ரோவின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


Vivo S12 Pro: இந்தியாவில் விலை என்ன?


12 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் கொண்ட Vivo S12 Pro போனின் விலை விலை 3,499 யுவான் (ரூ. 41,746) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள் 


Vivo S12 Pro: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்


சீன டிப்ஸ்டரின் கூற்றுப்படி, Vivo S12 Pro ஆனது 6.5-இன்ச் OLED திரை கர்வ்ட் எட்ஜ் டிஸ்பிளே இருக்கும். ஸ்க்ரீன், முழு HD + ரெசல்யூஷன் தெளிவுத்திறன் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும். இது OriginOS Ocean UI அடிப்படையிலான Android 12 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Vivo S12 Pro: கேமரா


Vivo S12 Pro-வில் (Vivo) 50-மெகாபிக்சல் Samsung JN1 முன்பக்கக் கேமரா இருக்கும். இது 8-மெகாபிக்சல் Hynix Hi846 அல்ட்ராவைட் லென்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். போனின் பின்புற கேமரா அமைப்பில் OIS ஆதரவுடன் 108-மெகாபிக்சல் Samsung HM2 முதன்மை கேமரா, 8-மெகாபிக்சல் OmniVision OV8856 அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் B&W லென்ஸ் ஆகியவை இருக்கும்.


Vivo S12 Pro: பேட்டரி


டைமென்ஷன் 1200 சிப்செட் Vivo S12 Pro ஐ மேம்படுத்தும். இது 12GB LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் வரக்கூடும். இதில் 4,300 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். இது கொரில்லா கிளாஸ் ஃபிரண்ட், 6-சீரிஸ் அலுமினியம் அலாய் கிராம், ரோட்டார் மோட்டார் மற்றும் NFC போன்ற அம்சங்களை வழங்கும்.


ALSO READ | iPhone 13 Pro ஐ இலவசமாகப் பெறுங்கள்! இதை செய்தால் போதும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR