ஏர்டெல் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 1ஜிபி டேட்டா 2.45 ரூபாய் தான் - முக்கிய திட்டத்தில் மாற்றம்!
Airtel Rs 49 Data Plan Changes: ஏர்டெல் நிறுவனம் அதன் 49 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் பிளானில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, வாடிக்கையாளர்களுக்கான பலன்களை அதிகரித்துள்ளது.
Airtel Rs 49 Data Plan Changes: கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தனிநபருக்கான டேட்டா தேவை என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக, பலரும் வீட்டில் வைஃபை (Wi-Fi) பொருத்துவதையும் வாடிக்கையாக்கிவிட்டனர். நகரப்பகுதிகளில் இந்த போக்கு அதிகரித்து வருவதற்கு காரணம், வீட்டில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் ஆகிய சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது.
இவை அனைத்திற்கும் டேட்டா தேவை என்பது அதிகம். Wi-Fi இல்லாதவர்கள் தங்களின் மொபைல் டேட்டா மூலமே தங்களுக்கான தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். தற்போது இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பரந்துபட்ட அளவில் 5ஜி இணைய சேவையை வழங்குகிறது. இருப்பினும், அந்நிறுவனங்களின் டேட்டா பிளான்களின் அவசியமும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. அத்தகயை டேட்டா பிளானில் ஏர்டெல் கொண்டு வந்திருக்கும் அசத்தல் மாற்றம் குறித்து இதில் பார்க்கலாம்.
அதிக டேட்டா வேணுமா?
ஏர்டெல் நிறுவனம் அதன் தற்போதைய 49 ரூபாய் திட்டத்தில் பெரிய அப்டேட் ஒன்று கொடுத்துள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட தற்போது அதிக டேட்டா பலன்களை வழங்கும் என்பது சிறப்பம்சம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், இப்போது பயனர்கள் 1 ஜிபி டேட்டாவை வெறும் 2.45 ரூபாய் விலையில் பெறுவார்கள் எனலாம்.
மேலும் படிக்க | ஏர்டெல்லை காலி பண்ண புது பிளானை கொண்டு வரும் ஜியோ..! 14 இலவசம்
முன்னதாக இந்த திட்டத்தில், 6ஜிபி அதிவேக டேட்டா வசதியை 49 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் பெற்று வந்தார்கள். அதே நேரத்தில், தற்போது டேட்டா உபயோகத்தையும் ஏர்டெல் அதிகரித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏர்டெல்லின் இந்த டேட்டா பேக் குறித்த முழுமையான தகவல்களையும் இங்கு காணலாம், டேட்டாவை அதிகம் பயன்படுத்துபவராக இருக்கும்பட்சத்தில் இது உங்களுக்கானது.
நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்து உங்களின் கூடுதல் டேட்டா தேவைகளை பூர்த்தி செய்ய தனி டேட்டா பேக்கை வேண்டும் என்றால் இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு பயனளிக்கலாம். முன்னரே சொன்னது போல் ஏர்டெல் நிறுவனம் இந்த 49 ரூபாய் டேட்டா Add-On ரீசார்ஜ் திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் தற்போதைய பலன்களை விட முதலில் பழைய பலன்களை தெரிந்துகொள்வதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது எளிதில் புலப்படும்.
ரூ. 49 பிளானின் முந்தைய பலன்கள்
ஏர்டெல் நிறுவனம் 49 ரூபாய்க்கு வழங்கும் இந்த டேட்டா Add-On திட்டம் முன்பு, 6ஜிபி டேட்டாவை 1 நாள் வேலிடிட்டியுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது. மேலும், இந்த 49 ரூபாய் திட்டத்திற்கு பிறகு, வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற பலன்களுடன் 99 ரூபாய் திட்டத்தையும் ஏர்டெல் வைத்துள்ளது. 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கும் முன் 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் தற்போதைய பலன்களை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
ரூ. 49 பிளானின் தற்போதைய பலன்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி என்பது ஒரே ஒரு நாள் தான். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தற்போதைய அப்டேட்டின்படி, வாடிக்கையாளர்கள் வரம்பற்ற டேட்டா வசதியைப் பெறுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 20ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். 20ஜிபி டேட்டா முடிந்த பிறகு, இணைய வேகம் 64 kbps ஆக குறையும். இதனாலேயே, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மூலம் பயனர்கள் 2.45 ரூபாய் விலையில் 1ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள் என முன்னரே கூறினோம். ஒருநாளைக்கு திடீரென அதிக டேட்டா தேவைப்படும்போது இத்திட்டம் உங்களுக்கு பலனளிக்கும்.
ரூ. 99 டேட்டா பிளான்
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை 99 ரூபாய். இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்கள் 20ஜிபி டேட்டாவை வரம்பற்ற டேட்டாவாகப் பெறுகிறார்கள். ஆனால், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 2 நாள்களில் மொத்தம் 40 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | ஜியோ வச்சிருந்தா ஒரே ஜாலி தான்... 12 ஓடிடிகள் இலவசம்... இப்போது கூடுதல் டேட்டாவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ