ஜியோ வச்சிருந்தா ஒரே ஜாலி தான்... 12 ஓடிடிகள் இலவசம்... இப்போது கூடுதல் டேட்டாவும்!

JioTV Premium Plans: ஜியோ நிறுவனம் அதன் JioTV பிரீமியம் பிளானில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. இதன் முழு விவரத்தையும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2024, 07:56 PM IST
  • JioTV பிரீமியம் பிளான்கள் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது
  • JioTV பிரீமியத்தில் மொத்தம் 4 பிளான்கள் உள்ளன.
  • JioTV பிரீமியம் திட்டத்தில் 12 ஓடிடிகள் வரை இலவசமாக பெறலாம்.
ஜியோ வச்சிருந்தா ஒரே ஜாலி தான்... 12 ஓடிடிகள் இலவசம்... இப்போது கூடுதல் டேட்டாவும்!

JioTV Premium Plans: ஜியோ நிறுவனம் அதன் தொடக்க கால கட்டத்தில் சிம் உள்பட பல சேவைகளை இலவசமாக வழங்கி வந்தது. தொடர்ந்து, அந்நிறுவனம் தகவல் தொலைத்தொடர்பு துறையில் நன்கு வேரூன்றிய பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அதன் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது எனலாம். மேலும், அதன் சேவையையும் நல்ல முறையில் அளித்து வந்தது. 

Add Zee News as a Preferred Source

ஜியோவின் உச்சகட்ட வளர்ச்சி என்பது பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை துறையை விட்டு வெளியேற வைத்தது எனலாம். ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோ உடன் ஈடுகொடுத்து போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தற்போது ஒன்றாகிவிட்டது. ஜியோ, ஏர்டெல் ஆகியவை 5ஜி சேவைக்கே சென்றுவிட்ட நிலையில், வோடபோன் ஐடியா இன்னும் 4ஜியை தாண்டவில்லை.

JioTV பிரீமியம் ரீசார்ஜ் திட்டங்கள்

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போதுதான் 4ஜி சேவையிலேயே காலடி எடுத்து வைத்துள்ளது. இப்படி ஜியோவின் வருகை பல நிறுவனங்களின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. குறிப்பாக, ஜியோ நிறுவனம் பல சேவைகளையும் சலுகை விலையிலும் வழங்கி வருகிறது. அந்த வகையில், JioTV சேவை அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாள்களாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க | 5G-யில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வோடபோன்! ஏர்டெல், ஜியோ விலையில் மாற்றம்?

சில மாதங்களுக்கு முன் JioTV பிரீமியம் திட்டங்களை ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. JioTV பிரீமியத்தில் ரூ.148, ரூ.398, ரூ.1198, ரூ.4498 என நான்கு திட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில், இந்த திட்டங்களின் கீழ், கூடுதல் டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. 

என்னென்ன ஓடிடிகள் இலவசம்?

இந்த கூடுதல் டேட்டா என்பது, பயனர்களுக்கு கூடுதல் தரவு அணுகலை வழங்குகிறது. ஜியோ நிறுவனத்தின் JioTV பிரீமியம் திட்டம் ஒரே நேரத்தில் பல OTT செயலிகளின் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரீசார்ஜ் திட்டங்களை ஜியோவில் நீங்கள் தேடுகின்றீர்கள் என்றால், JioTV பிரீமியம் திட்டங்கள் சிறந்த ஆப்ஷனாகும்.

குறிப்பாக, JioTV பிரீமியத்தின் ரூ.1198 ரீசார்ஜ் திட்டம் சுமார் 12 ஓடிடிகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. பிரைம் வீடியோ மொபைல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லைன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், டாக்குபே, எபிக்ஆன், சன்நெக்ஸ்ட், Hoichoi, Chaupal, Planet Marathi மற்றும் Kachha Lannka போன்றவை இதில் உள்ளது. JioTV, JioCloud வசதிகளும் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

JioTV பிரீமியம்... போனஸ் டேட்டா

JioTV பிரீமியம் ரூ.1198 திட்டத்துடன் போனஸ் டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவை பயனர்கள் அணுகலாம். அதன்படி, இந்த திட்டம் உங்களுக்கு 84 நாட்களுக்குள் 168 ஜிபி டேட்டாவை தருகிறது.

போனஸ் டேட்டா என்றால், 18GB டேட்டாவை கூடுதலாக ஜியோ நிறுவனம் இப்போது இந்த திட்டத்தில் வழங்குகிறது. இதன்படி மொத்தம் பழைய 168 ஜிபி உடன் இதையும் சேர்த்தால், மொத்தம் 186ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். 

பலன்கள்

தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறையும். மேலும், நிறுவனத்தின் இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஜியோ செயலி மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் டேட்டா பலன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். மேலும், இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறலாம்.

மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களக்கு ஆபத்து..! 75 கோடி பேரின் விவரங்கள் டார்க் வெப்பில் லீக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News