iPhone-ல் வருகின்றன அட்டகாசமான புதிய அம்சங்கள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
ப்ரைவசி மேம்படுத்தல்களின் அடிப்படையில் புதிய அம்சங்கள் மிகப்பெரிய iOS 15 புதுப்பிப்பாக கருதப்படுகின்றன.
iOS 15.2 Upgrade: ஆப்பிளின் iOS 15.2 வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இனி, எந்த நேரமும் இதை எதுர்பார்க்கலாம். ப்ரைவசி மேம்படுத்தல்களின் அடிப்படையில் இது நிச்சயமாக மிகப்பெரிய iOS 15 புதுப்பிப்பாக கருதப்படுகின்றது.
iOS 15.2 புதுப்பிப்பு, உங்கள் ப்ரைவசிக்கான முக்கிய மற்றும் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கும். இது பல அற்புதமான புதிய iPhone அம்சங்களுடன் வருகிறது. iOS 15.2 இன் பீட்டா 4 பதிப்பு இப்போது வந்துவிட்டது, அதாவது அடுத்த சில வாரங்களில், வாடிக்கையாளர்கள், புதிய iPhone புதுப்பிப்பை வரவேற்க தயாராகலாம். iOS 15.2 இல் நீங்கள் பார்க்கக்கூடிய முக்கிய மூன்று iPhone அம்சங்களைப் பற்றி இங்கே காணலாம்.
iOS 15.2-ல் வரும் ஆப் ப்ரைவசி ரிப்போர்ட் ஒரு கேம் சேஞ்சராக இருக்கலாம். ESET இன் இணைய பாதுகாப்பு நிபுணர் ஜேக் மூர் கூறுகையில், "பின்னணியில் இயங்கும் செயலிகளை மதிப்பாய்வு செய்வதற்கும், அனுமதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஆப்ஸ் தனியுரிமை அறிக்கை சரியான வாய்ப்பை வழங்குகிறது" என்கிறார். iOS 15.2 அறிமுகம் ஆகும்போது, உங்கள் ஐபோன் செயலி அனுமதிகளை சரிபார்த்து, தேவையான இடங்களில் அவற்றைத் திரும்பப் பெறுமாறு மூர் அறிவுறுத்துகிறார்.
ALSO READ: Bumper Discount Offer! iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி
iOS 15.2: ஸ்கேன் மற்றும் ஏர் டிராக்கிங்
iOS 15.2 இல் உள்ள மற்றொரு சிறந்த தனியுரிமை அம்சமான ஃபைண்ட் மை ஆப்ஸில் ஒரு மேம்படுத்தல் உள்ளது. இதன் மூலம், நீங்கள், ஏர் டேக்ஸ் அல்லது 'ஃபைண்ட் மை எனேபிள்ட் ஐடம்ஸ்' -ஐ ஸ்கேன் செய்யலாம். இவை உங்களை கண்காணிக்கும் (டிராக் செய்யும்).
iOS 15.2 இல், "என்னைக் கண்காணிக்கக்கூடிய உருப்படிகள்" என்பதன் கீழ், ஐடம் டேப்பில், 'ஃபைண்ட் மை ஏப்'-ல் ஒரு வசதி உள்ளது. இது உங்கள் அருகிலுள்ள பொருட்களுக்கு ஸ்கேன் செய்யும் வசதியை அளிக்கின்றது. இது உங்களை டிராக் செய்ய உதவும்.
iOS 15.2: உங்கள் ஆப்பிள் மெயில் செயலியிலிருந்து 'மை ஈமெயில்'-ஐ மறைக்கலாம்
iOS 15.2 இல் வரும் மற்றொரு புதிய அம்சம், உங்கள் ஆப்பிள் (Apple) மெயில் பயன்பாட்டிலிருந்து நேரடியாக உங்கள் மின்னஞ்சலை மறைக்கும் திறன் ஆகும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மின்னஞ்சலுக்குச் சென்று, Cc/Bcc புலத்தில் டேப் செய்ய வேண்டும். உங்கள் மின்னஞ்சலை மறைப்பதற்கான விருப்பம் பாப் அப் ஆக வேண்டும்.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் சிலர், உங்கள் உண்மையான மின்னஞ்சல் தகவல்களை அறிய வேண்டாம் என நீங்கள் நினைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும்போது, வேறு ஒரு மாற்று மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த இந்த அம்சம் உங்களை அனுமதிக்கும். உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் உங்கள் உண்மையான முகவரிக்கு அனுப்பப்படும். மேலும் உங்கள் போலி மின்னஞ்சல் முகவரிகளை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.
ALSO READ:Flipkart Sale: வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு புது Samsung 5G Phone
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR