ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி! ஆப்பிள் நிறுவனம் அறிவித்த அட்டகாசமான திட்டம்!

ஆப்பிள் ஐபோன், உதிரி பாகங்களை நுகர்வோருக்கு விற்க, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை அறிவித்துள்ளது. ஐபோனின் அசல் பாகங்களை நீங்களே வாங்க முடியும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 05:53 PM IST
ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி! ஆப்பிள் நிறுவனம் அறிவித்த அட்டகாசமான திட்டம்! title=

முதல் முறையாக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் முக்கிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. சில ஐபோன் கைபேசிகள் மற்றும் மேக் கணினிகளை பழுதுபார்ப்பதற்கான கையேடுகள் உதிரி பாகங்களை அதன் பயனர்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கும். பல ஆண்டுகளாக இந்த சுய சேவை பழுதுபார்க்கும் திட்டம் (Self Service Repair Programme ) நுகர்வோர் குழுக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த பிறகு, தற்போது இந்த திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதாவது நுகர்வோர் தங்கள் ஐபோன், மேக் கணினிகளை தாங்களாகவே சரிசெய்துகொள்ள அனுமதிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் "செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டம்" நேற்று புதன்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது. 

செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் கையேட்டைப் படித்த பிறகு, நேரடியாக ஐபோனின் பாகங்களை பழுதுபார்ப்பதற்காக வாங்க முடியும். சுமார் 200 பாகங்கள் மற்றும் சாதனங்களுடன் ஆன்லைன் ஸ்டோர் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கான டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா தொடர்பான பாகங்கள் மற்றும் காம்போனென்ட்கள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ALSO READ |  iPhone 13 மிக மலிவான விலையில்; வாய்ப்பை தவற விடாதீர்கள்..!!

பின்னர் இந்த திட்டத்தின் கீழ், ஆப்பிளின் M1 சிப் மற்றும் பொதுவான பழுதுபார்ப்புகளுடன் கூடிய Mac கணினிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் (Technology company Apple) உறுதிப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சாதாரண விலையில் ஒரு சுயாதீன பழுதுபார்க்கும் கடையில் பாகங்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், தள்ளுபடியைப் பெற, பயன்படுத்தப்பட்ட பாகங்கள் பழுதுபார்க்கப்பட்ட பிறகு ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்ப வேண்டும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. அதன் ஓராண்டுக்குப் பிறகு, பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் சீரிஸ் 13 இன் கீழ் நான்கு ஐபோன்களை அறிமுகப்படுத்தியது. இவை iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max ஆகும். இதனுடன், லேட்டஸ்ட் ஆப்பிளின் வாட்ச்சான, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 (Apple Watch Series 7) அறிமுகம் செய்துள்ளது.

ALSO READ |  iPhone ஆர்வலர்களுக்கு Bad News: எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது ஆப்பிள் நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News