Poco தனது புதிய X-சீரிஸ் ஸ்மார்ட்போனை நாட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Poco X5 Pro 5G ஆனது நிறுவனத்தின் புதிய மொபைல். இப்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் கைகளில் Poco போன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. லேட்டஸ்ட் தகவல்களின்படி, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக்கின் கைகளில் காணப்பட்ட போன் Poco X5 Pro 5G ஸ்மார்ட்போன் டெல்லியில் வெளியிடப்பட இருக்கிறது. அதிகபட்சம் ஜனவரி 22 ஆம் தேதி இந்த மொபைலின் அறிமுக நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களின்படி, ஹர்திக் பாண்டியாவின் கைகளில் காணப்பட்ட போகோ போனின் நிறம் மஞ்சள். வரவிருக்கும் Poco போனின் வடிவமைப்பு இந்தப் படங்களிலிருந்து யூகிக்கப்படுகிறது. Poco X5 Pro-வில் பின்புறத்தில் டிரிபிள் கேமரா இருக்கும். இது தவிர, தொலைபேசியின் பின்புற பேனலில் மேல் பகுதியிலும் ஒரு பெரிய கேமரா தொகுதி காணப்படும். கைரேகை ஸ்கேனர் ஒருங்கிணைக்கப்பட்ட கைபேசியின் வலது பக்கத்தில் இருக்கும். 


 POCO X5 Pro 5G பற்றி பேசுகையில், போகோவின் நன்கு அறியப்பட்ட வடிவமைப்பு வரவிருக்கும் தொலைபேசியில் தெரியும். கைபேசியானது பளபளப்பான பின் பேனல் மற்றும் வண்ணம் கலந்த கேமரா தீமுடன் வரும். கேமரா லென்ஸுக்கு அருகில் Poco-ன் பிராண்டிங்கைக் காணலாம். அதேநேரத்தில் தொலைபேசியின் முன் பேனலின் படம் கசிந்துவிடவில்லை. 


மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்


POCO X5 Pro 5G எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்


Poco X5 Pro 5G விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மூலம் இயக்கப்படும். கைபேசியில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொடுக்கப்படலாம். கேமராவைப் பற்றி பேசுகையில், Poco X5 Pro 5G மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 108 மெகாபிக்சல் முதன்மை, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைப் பெறும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக சாதனத்தில் 16 மெகாபிக்சல் முன் சென்சார் கொடுக்கப்படலாம்.



Poco X5 Pro 5G-ல் 5G இணைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Poco-ன் வரவிருக்கும் தொலைபேசி மலிவு விலையில் சக்திவாய்ந்த செயலியுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா கையில் இருப்பதால் போகோ போனை பலரும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர்.


மேலும் படிக்க | Flipkart Big Saving Days 2023: அட நிஜம்தான், நம்புங்க!! ரூ.60,000 ஐபோனின் விலை வெறும் ரூ. 18,000


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ