Disney Plus Hotstar - HBO: பல ஓடிடி தளங்கள், படங்கள், வெப்-சீரிஸ்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தங்கள் தயாரிப்பிலும், பிற தயாரிப்பு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளையும் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு, பிரபல தொலைக்காட்சி நெட்வார்க்கான HBO, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உடன் ஒப்பந்தம் வைத்திருந்தது. அதனால், HBO தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் தயாரிப்புகள் அனைத்தும் ஹாட்ஸ்டாரில் உங்களால் பார்க்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒப்பந்தம் முடிவடைகிறது


HBO நிகழ்ச்சிகளுக்கு என்று இருக்கும் ரசிகர்கள், ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்தி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற நிகழ்ச்சிகளை கண்டு களிப்பார்கள். இதில், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி/தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குதான் போடப்பட்டிருக்கும். அவர்களின் ஒப்பந்தம்  காலவதியாகும்போது, அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பார்கள். 


இந்த ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில், பல மற்ற ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு  அந்த நிறுவனத்திடம் புதிய ஒப்பந்தங்களை பேசுவார்கள். பழைய ஒப்பந்தத்தை விட புதிதாக முன்மொழியப்பட்ட மற்ற நிறுவனங்களின் ஒப்பந்தம் பிடித்திருந்தால், பழையதை புதிப்பிப்பதை கைவிட்டு, புதிய ஒப்பந்தத்தை நிறுவனங்கள் ஏற்கும். அதே கதைதான் இங்கும். 


மேலும் படிக்க | இலவச நெட்பிளிக்ஸ்! ஜியோவின் சூப்பரான OTT பிளான்...!


இதுவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் - HBO நிறுவனங்கள் ஒப்பந்ததில் இருந்த நிலையில், அவர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் புதிப்பிக்கப்படவில்லை. எனவே, இனி HBO நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் கிடைக்காது என தெரிய வருகிறது. 


HBO உடனான ஒப்பந்தத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்தால் தக்கவைத்துக்கொள்ள இயலாததால், இந்திய வாடிக்கையாளர்கள் பலர், HBO-வின் நிகழ்ச்சிகளை இனி பார்க்க இயலாது. உதாரணத்திற்கு, உலக புகழ்பெற்ற வெப்-சீரிஸ், 'Game of Thrones' போன்ற தொடர்களை இந்திய வாடிக்கையாளர்கள் இனி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காண முடியாது. 



இதுகுறித்து, டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் ட்விட்டரில்,"வரும் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் HBO நிகழ்ச்சிகளை கிடைக்காது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் பரந்துப்பட்ட கலெக்ஷன்ஸில், 10 மொழிகளில்,  1,00,000 மணிநேரத்திற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை நீங்கள் கண்டு களிக்கலாம். உலகெங்கும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை இதில் காணலாம்" என தெரிவித்துள்ளது. 


HBO தனது நிகழ்ச்சிகளுக்கென HBO Max என்ற ஓடிடி தளத்தை வைத்திருக்கும் நிலையில், அது இன்னும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்த நிகழ்ச்சிகளை முறைப்படி பார்க்க, தற்போது இந்தியர்களுக்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. 


ஐபிஎல் கிடையாது


Amazon மற்றும் HBO டிசம்பர் 2022இல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் (சந்தைகளில்), சேனல்கள் வழியாக பிரைம் வீடியோ செயலி மூலம், பயனர்கள் HBO Max நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இந்தியாவில் HBO Max கிடைக்காததால், இந்தச் சேவை விரைவில் இங்கு தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் விளம்பரமில்லா ஒளிபரப்புக்கு மாதம் 16 அமெரிக்க டாலர் (ரூ. 1,314) வசூலிக்கப்படுகிறது.


ஹாட்ஸ்டாரில் உள்ள அனைத்து HBO நிகழ்ச்சிகளும் இம்மாத இறுதி வரை கிடைக்கும். எனவே, நீங்கள் எந்த நிகழ்ச்சிகளையும் தவறவிட்டிருந்தால், அதை பார்க்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும். இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக ஹாட்ஸ்டாரில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒளிப்பரப்பு ஆகாது. மேலும், ஐபிஎல் ஜியோ சினிமாஸில் இலவசமாகக் கிடைக்கும்.


மேலும் படிக்க | Vi அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரூ.401 திட்டம்! இத்தனை சிறப்பம்சங்களா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ