பழைய மற்றும் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க வேண்டுமா? அதற்கான சில உதவிக்குறிப்புகள் உங்களுக்காக...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு புதிய மொபைலை வாங்கும்போதோ, அல்லது சில வாட்ஸ்அப் உரையாடல்களை நீக்கும்போதோ, வாட்ஸ்அப்பை டெலீட் செய்துவிட்டு மீண்டும் செயலியை நிறுவும்போதோ, தேவைப்படும் செய்திகளும் தவறாக நீக்கிவிடும் வாய்ப்புகளும் உள்ளன. அப்படி ஏதாவது நடந்தால், அகன்ற வாட்ஸ்அப்  செய்திகளை  திரும்பவும் மீட்டமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.


நீக்கப்பட்ட செய்திகளையும் வாட்ஸ்அப்பில் மீட்டெடுக்க விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களுக்கு உதவிக்குறிப்புகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள். நீக்கப்பட்ட செய்திகளைப் படிக்க உங்களை அனுமதிக்கும் அதிகாரப்பூர்வ அம்சம் வாட்ஸ்அப்பில் இல்லை என்றாலும், வாட்ஸ்ரெமோவ்+ (WhatsRemoved+) என்ற மூன்றாம் தரப்பு செயலி உள்ளது. நீக்கப்பட்ட அனைத்து வாட்ஸ்அப் செய்திகளையும் இந்த செயலியைக் கொண்டு மீட்டமைக்கலாம். படிக்க வைக்கும்.


நாம் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும்போதெல்லாம், பழைய வாட்ஸ்அப் தொடர்புகள், மீடியா கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் இழக்கிறோம், அது சில நேரங்களில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும். இப்போது அந்த சிக்கல் இல்லை. உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்களை இழக்காதபடி புதிய வழிமுறைகள் உள்ளன.


Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!


பொதுவாக தினமும் அதிகாலை 2 மணிக்கு வாட்ஸ்அப், பயனர்களின் உரையாடல்களை அரட்டைகளை காப்புப்பிரதி எடுக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்றால் உங்கள் அமைப்பை (setting) நீங்களே (manually) மாற்றவேண்டும்.  


உரையாடல் காப்பு அமைப்பு
உரையாடல் காப்புப்பிரதியை இயக்க, வாட்ஸ்அப்பைத் திறந்து, அமைப்புகள்> உரையாடல்கள் (Settings > go to Chats >) என்ற பிரிவுக்குச் சென்று சென்று> உரையாடல் காப்புப்பிரதியை (Chat backup) கிளிக் செய்யவும்.


உங்கள் உரையாடல் காப்புப்பிரதியின் frequencyஐ ஒருபோதும் வேண்டாம்/தினசரி/வாராந்திர/மாதந்தோறும் (never/daily/weekly/monthly) என்ற தெரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.  
நீங்கள் Android ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால் காப்புப்பிரதி சேமிக்கப்பட வேண்டிய Google கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


ஐபோன் பயனர்கள், வாட்ஸ்அப்> உரையாடல்கள் > உரையாடல் காப்புப்பிரதிக்குள் (WhatsApp > Chats > Chat Backup) உள்ள அமைப்புகளுக்குச் செல்லவும், அங்கு நீங்கள் Auto Backup frequency அல்லது use Back Up என்ற தெரிவை தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஐக்லவுடில் (iCloud) காப்புப்பிரதியை உடனடியாகத் தொடங்க பேக் அப் நவ் (Back Up Now) என்ற தெரிவை பயன்படுத்தலாம்.


Also Read | சூயஸ் கால்வாய் டிராஃபிக் ஜாமுக்கு காரணம் என ட்ரோலான கேப்டன்


நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுப்பதற்கான படிகள்
உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் உரையாடல் காப்பு விருப்பம் தினசரி என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. இது உங்கள் உரையாடல்களின் காப்புப்பிரதி தேவைப்படும் போதெல்லாம் மீட்டெடுப்பதை எளிதாக்கும்.


புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும்போது அல்லது வாட்ஸ்அப் கணக்கை நீக்கும்போது நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை நாம் பெரும்பாலும் மீட்டெடுக்க முடியும்.


புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறினால், முதலில் நீங்கள் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்க வேண்டும்.


தொலைபேசி எண்ணை உள்ளிட்டு உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைந்து OTP ஐப் பெற்று உங்கள் எண்ணைச் சரிபார்க்கவும்.


செயலியை நிறுவிய பிறகு, உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் அனைத்தையும் 'மீட்டமை' செய்வதற்கான தெரிவை பெறுவீர்கள்.


மீட்டமை என்ற விருப்பத்தை சொடுக்கவும், உங்கள் புதிய / நீக்கப்பட்ட அனைத்து வாட்ஸ்அப் செய்திகளும் உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் மீட்டமைக்கப்படும்.


Also Read | #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR