கோடைகாலம் வந்துவிட்டாலே கரண்ட் கட் என்பது இயல்பாக எதிர்கொள்ளக்கூடிய ஒன்று. இந்த நேரத்தில் ஸ்மார்ட்டாக யோசித்து ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்வது மட்டுமே சிறந்த வழி. ஏனென்றால் எப்போது கரண்ட்போகும், எப்போது கரண்ட் வரும் என யாருக்கும் தெரியாது. அவசர அழைப்புகளை மேற்கொள்வதற்கு போன்களின் சார்ஜ் இருப்பது அவசியம். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், மின்சாரம் இல்லாத நேரத்தில் நீங்கள் உங்கள் போனுக்கு சார்ஜ் செய்ய முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரண்ட் இல்லாமல் சார்ஜ் செய்வது எப்படி?


கரண்ட் இல்லாமல் சார்ஜ் செய்வதற்கு ஒரே வழி பவர் பேங்க் தான். தரமான பவர் பேங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு மின்சாரம் இருக்கும்போது அதனை சார்ஜ் செய்து வைத்திருந்தீர்கள் என்றால், மின்சாரம் இல்லாதபோது உங்களின் ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். மலிவு விலையில் வாங்கும் பவர் பேங்குகள் உங்களுக்கு அதிக லைஃப் கொடுக்காது. அதன்பின்னர் மீண்டும் புதிய பவர்பேங்க் வாங்க வேண்டியிருக்கும். 


மேலும் படிக்க | ஐபோன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் வைத்த ’குட்டு’ - வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி


Ubon PB-X31 சாம்பியன் பவர்பேங்க் 


பல பவர்பேங்குகள் சந்தையில் இருக்கும் நிலையில் புதியதாக  Ubon PB-X31 சாம்பியன் என்ற பவர்பேங்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Ubon நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Ubon PB-X31 Champion பவர்பேங்கை 3,999 ரூபாய் விலையில் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 10,000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் ஷார்ட் சர்க்யூட் செய்யப்பட்டு பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. இது இரட்டை உள்ளீடு சார்ஜிங் போர்ட்களை கொண்டிருக்கும். 2.4 டூயல் யூ.எஸ்.பி உடன் வருகிறது.



பவர்பேங்க் விவரக்குறிப்புகள்


Ubon Champion பவர்பேங்கைப் பொறுத்தவரை மைக்ரோ USB மற்றும் Type C சார்ஜர்கள் என இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் வேகமாக சார்ஜ் செய்ய உங்களுக்கு உதவும். வலுவான லித்தியம் பாலிமர் பேட்டரியால் உருவாக்கப்பட்டிருப்பதால், லைஃப்புக்கு பிரச்சனையில்லை. நீண்ட நாட்களுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். சார்ஜர் மற்றும் கெஜெட்டுகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டுஇந்த பவர்பேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், டேப்லெட்டுகள், கேமராக்கள், ஹெட்ஃபோன்கள், ஆண்ட்ராய்டு மற்றும் C டைப் சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.


Ubon PB-X31 பவர்பேங்க் வடிவமைப்பு


புதிய Ubon Champion Fast Charging Power Bank-ஆனது கையடக்க மற்றும் கச்சிதமான அமைப்பில் வருகிறது. இதனால் பயனர்கள் பயணத்தின்போதுகூட தங்களின் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் கூடுதலாக ஒரு ஆண்டி-ஸ்லிப் அமைப்பும் உள்ளது. புதிதாக இந்த பவர்பேங்கை வாங்குபவர்களுக்கு 6 மாதம் வாரண்டி கொடுக்கப்படுகிறது. இதுதான் இந்த பவர்பேங்கின் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். அனைத்து விதமான சில்லறைக் கடைகளிலும் இந்த பவர்பேங்கை நீங்கள் பெறலாம். 


மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; 32 Inch ஸ்மார்ட் டிவிக்களுக்கு அதிரடி தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR