ஐபோன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் வைத்த ’குட்டு’ - வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி

சார்ஜர் இல்லாமல் ஐபோனை விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்த ஐபோன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2022, 04:32 PM IST
  • ஆப்பிள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் வைத்த குட்டு
  • சார்ஜர் இல்லாமல் போன்களை விற்பதா?
  • கொள்ளை லாபம் ஈட்ட போட்ட திட்டத்துக்கு தடை
ஐபோன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் வைத்த ’குட்டு’ - வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி title=

ஐபோன்கள் மீது பிரியம் கொள்ளாதவர்களே இல்லை என்று கூறலாம். மிகத்தரமான கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் வரும் இந்த போன் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இவைதவிர ஒருவரின் வாழ்க்கை தரத்தைக் காட்டவும் ஐபோன்கள் குறியீடாக உள்ளது. ஒருமுறை ஐபோன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டால் நீங்கள் வேறு எந்த போனையும் விரும்ப மாட்டீர்கள். அத்தகைய பிராண்டு மொபைலுக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.  

போன்களின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் இந்தபோன் ஆரம்பத்தில் சார்ஜர்களை வழங்கியது. ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்து சார்ஜர்கள் வழங்குவதை நிறுத்தியது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 சீரிஸ் போன்களைக் கூட சார்ஜர்கள் இல்லாமலேயே ஐபோன் அறிமுகப்படுத்தியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாற 8 டிப்ஸ்

அதில், சார்ஜர் இல்லாமல் போன்களை விற்கும் ஆப்பிள் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டார். இந்த வழக்கை விசாரித்த பிரேசில் நீதிமன்றமும் சார்ஜர் வழங்காததற்கு காரணம் கேட்டபோது, சுற்றுச்சூழல் காரணிகளை மேற்கோள் காட்டியுள்ளன. இதனை ஏற்காத பிரேசில் நீதிமன்றம், ஐபோன் நிறுவனத்துக்கு அபராதம் விதித்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. 

நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்காமல் போனதற்கான காரணங்கள் தான், இங்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் காரணிகளை காட்டி சார்ஜரை வைக்காத ஆப்பிள் நிறுவனம் இதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளது. சார்ஜர் இல்லையென்றால் பெட்டியின் அளவு குறையும், குறைந்த இடத்தில் அதிக ஸ்மார்ட்போன்களை வைக்கலாம், ஏற்றுமதி செலவும் அந்த நிறுவனத்துக்கு குறைந்துள்ளது. 

பல்வேறு வகைகளில் சேமிப்பை ஈட்டி லாபம் பார்த்துள்ள அந்த நிறுவனம் வேடிக்கையான காரணத்தை கூறி தப்பிக்க முற்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றம் விடாமல் அபராதம் விதித்துள்ளது. மேலும், சார்ஜருடன் போன்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த நடைமுறையை அந்த நிறுவனம் பின்பற்றுமா? என்பது தெரியவில்லை. இதேபுகாரில் Samsung, Xiaomi மற்றும் Realm மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் ரீல்ஸை எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News