புது டெல்லி: இருசக்கர வாகன பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!! இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 5 முதல் ரூ.2,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதிரி பாகங்கள் மற்றும் வாகனப் பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது அறிக்கையில், "ரூ. 2,000 வரையிலான இந்த விலை உயர்வு மாடல் மற்றும் சந்தையைப் பொறுத்தது." என்று குறிப்பிட்டுள்ளது.


2022-23 நிதியாண்டு துவங்கிய உடனேயே, ஹீரோ மோடோகார்ப் மட்டுமின்றி, டோயோடோ கிர்லோஸ்கர் மோடர், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ, மெர்சடிஸ்-பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் 2022 முதல் வாகனங்களின் விலையை செலவு விலையைக் காரணம் காட்டி உயர்த்த முடிவு செய்துள்ளன.


ஹீரோ மோடோகார்ப் மீது பெரும் குற்றச்சாட்டு


ஹீரோ மோடோகார்ப் நிறுவனம் செய்த 1000 கோடி ரூபாய் செலவு போலியானது என தெரியவந்துள்ளதாக சமீபத்தில் வெளிவந்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் பங்கு விலை 7 சதவீதம் குறைந்துள்ளது. 


மேலும் படிக்க | இந்தியாவில் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது Renault KIGER 


செய்தி நிறுவனமான ஏஎன்ஐ- இன் படி, மார்ச் 23 அன்று, டெல்லி-என்சிஆர்-இல் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் அதன் தலைவரும் எம்.டி.யுமான டாக்டர். பவன் முன்ஜாலின் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது மார்ச் 26 அன்று முடிவடைந்தது. டெல்லியைச் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டிஜிட்டல் மற்றும் ஹார்ட் காப்பியில் ஏராளமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ரூ. 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான விவகாரம்


அந்த நிறுவனம் அதிக அளவில் மோசடி பர்சேஸை காட்டியிருப்பது அறிக்கையில் தெரியவந்துள்ளது. கணக்கில் வரவு வைக்காமல் பெரும் தொகை ரொக்கமாக செலவிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 


டெல்லி அருகே ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக பண்ணை வீடு வாங்கியதற்கான ஆதாரமும் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது. முன்ஜால் சத்தர்பூரில் பண்ணை வீடுகளை வாங்கியுள்ளார், அதன் விலை வரியை மிச்சப்படுத்த மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவற்றை வாங்க, கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இந்திய தட்பவெட்பத்தில் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவது பாதுகாப்பானதா?