இந்தியாவில் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது Renault KIGER

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது சிறிய SUV Kyger இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 30, 2022, 08:54 PM IST
இந்தியாவில் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது Renault KIGER title=

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்,  மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் KIGER MY22 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் மல்டி சென்ஸ் டிரைவிங் மோடு, கேபின் ஸ்டோரேஜ் மற்றும் பொருட்களை வைப்பதற்கான இடம் போதுமான அளவு இருக்கிறது.  

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது சிறிய SUV Kyger இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை (2022 Renault KIGER) புதன்கிழமை (மார்ச் 30, 2022) அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை (Renault KIGER விலை) ரூ.5.84 லட்சம். 

PTI வெளியிட்ட செய்தியின்படி, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் KIGER MY22 ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரில் மல்டி சென்ஸ் டிரைவிங் மோடு, கேபின் ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் பற்றி எரிவதற்கான காரணம் என்ன?

இந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் முதலில் அறிமுகம் (Launch in India) செய்யப்பட உள்ளது.செய்தியின்படி, ரெனால்ட்டின் முதல் ஐந்து சர்வதேச சந்தைகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்க இந்த மாடல் (Renault KIGER) முக்கிய பங்கு வகித்ததாக நிறுவனம் கூறுகிறது. 

பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் வடிவமைப்புக் குழுக்களுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பால் ரெனால்ட் கைகர் (2022 Renault KIGER விலை) வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெறுவதாக பிரெஞ்சு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்படும் நிறுவனத்தின் மூன்றாவது மாடல் இதுவாகும். பின்னர் சர்வதேச அளவில் தொடங்கப்படும்.

மேலும் படிக்க | இந்தியாவில் அதிகம் அறியப்படாத மின்சார ஸ்கூட்டர் பிராண்டுகள்

இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது

KIGER MY22 காரில், இரண்டு எஞ்சின் விருப்பங்கள் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் போன்ற பல அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் சர்வதேச அளவில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்த மாடலை நேபாளம், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.

ஆடம்பரமான உட்புறம் மற்றும் டேஷ்போர்டு

இந்த நவீன காரின் பராமரிப்புச் செலவும் ஒரு கிலோமீட்டருக்கு 40 பைசா மட்டுமே என்று நிறுவனம் கூறுகிறது. ஆடம்பரமான உட்புறங்கள் மற்றும் டேஷ்போர்டு உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. 
பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், குளோபல் என்சிஏபி (Global NCAP)இந்த காருக்கு 4 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

மேலும் படிக்க | சனி, செவ்வாய் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News