Hero MotoCorp Price Hike: இந்தியாவில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை சற்று வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக, பைக்கின் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது எனலாம். அதில் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள் என அனைத்து வகை வாகனங்களும் மக்களால் அதிகம் வாங்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, இந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் இருச்சக்கர வாகனங்கள் (டாப் 10 மாடல்கள்) 11 லட்டத்து 41 ஆயிரத்து 891 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதத்தில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 968 யூனிட்கள் விற்பனையாகின. இந்தாண்டு 38,923 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி 3.53% வளர்ச்சி கண்டுள்ளது. 


டாப்பில் Hero Splendor


இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் விற்பனை 7.72% அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 368 யூனிட்கள் விற்பனையாகின. அதாவது 95 ஆயிரத்து 477 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. இந்த டாப் 10 மாடல்களாக Hero Splendor, Honda Activa, Honda Shine, Bajaj Pulsar, Hero HF Deluxe, TVS Jupiter, Suzuki Access, TVS XL, TVS Apache, TVS Raider ஆகியவை முறையே முதல் 10 இடங்களை பிடிக்கின்றன.


மேலும் படிக்க | மே 2024: அதிகம் விற்பனையான டாப் 8 ஸ்கூட்டிகள்... முதலிடம் எதற்கு தெரியுமா?


Hero-வின் இந்த 2 மாடல்கள்


இதில், Hero Splendor வழக்கம்போது முதலிடம் வகித்தாலும் வருடாந்திர விற்பனையில் 11.05% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாதாந்திர விற்பனையிலும் 5.08% ஆகவும் விற்பனை குறைந்துள்ளது. Hero நிறுவனத்தின் இருச்சக்கர வாகனங்களில் Splendor மட்டுமின்றி HF Deluxe (5ஆவது இடம்) மாடலும் விற்பனையில் உள்ளது. Hero HF Deluxe கடந்த மே மாதத்தில் 87 ஆயிரத்து 143 யூனிட்களையே விற்றது. கடந்த வருடம் மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 100 யூனிட்களை விற்றிருந்தது. இதன்மூலம் 20.13% வருடாந்திர விற்பனை சரிவை கண்டுள்ளது. அதேபோல், மாதாந்திர விற்பனையில் கடந்த ஏப்ரல் மாதத்தை விட 9 ஆயிரத்து 905 கார்கள் குறைவாக விற்று 10.21% வீழ்ச்சி அடைந்துள்ளன. 


விற்பனையில் கடும் வீழ்ச்சி


Hero Motocorp நிறுவனத்தின் Splendor, HF Deluxe ஆகிய மாடல் மட்டுமே டாப் 10 பட்டியிலில் இருக்கிறது. இருப்பினும், மாதாந்திர விற்பனையிலும், வருடாந்திர விற்பனையிலும் இந்த இரண்டு மாடல்கள் சரிவை சந்தித்துள்ளது அந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி Hero MotoCorp நிறுவனம் 2024 மே மாதத்தில் மொத்த இருச்சக்கர வாகன சந்தையில் மட்டும் 30.42% பங்களிப்பை அளித்துள்ளது. மொத்தமாக மே 2024இல் 4 லட்சத்து 43 ஆயிரத்து 381 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் 2024இல் 5 லட்சத்து 12 ஆயிரத்து 124 யூனிட்கள் விற்பனையான நிலையில் தற்போது மாதாந்திர விற்பனையில் 13.5% வீழ்ச்சியும், வருடாந்திர விற்பனையும் 17% வீழ்ச்சியும் Hero MotoCorp சந்தித்துள்ளது. 


ஜூலை 1இல் விலை உயர்வு


இந்நிலையில், Hero MotoCorp நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் Hero Motorcorp நிறுவனத்தின் பைக்குகளின் விலை உய்ரவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் சில மாடல்களுக்கு இந்த விலை ஏற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1500 வரை விலை உயர்வு இருக்கலாம் என்றும் ஒவ்வொரு மாடல்கள், மாநிலங்களை பொறுத்து விலை மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது. 


Hero MotoCorp நிறுவனம் அதன் தற்போது நேரடியாக மின்சார இரு சக்கர வாகனத்தை தயாரிக்கவில்லை. இருப்பினும் அதன் இணை நிறுவனமான Ather Energy நிறுவனத்தில் 124 கோடி ரூபாயை எதிர்காலத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Sedan கார் வாங்க திட்டமா... கடந்த மே மாதத்தில் மக்கள் எதை அதிகமாக வாங்கினார்கள் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ