ஆப்டிமா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா குழுமம் சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன. இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் ஐந்தாண்டு கூட்டாண்மையை அறிவித்தன. இந்த கூட்டணியில், இரு நிறுவனங்களும் இணைந்து, இந்த கூட்டாண்மையின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆப்டிமாவை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த ஸ்கூட்டர் பிதம்பூரில் அமைந்துள்ள ஆலையில் உருவாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்


ஆப்டிமா பற்றிய தகவல்கள் டிசம்பர் 2021 இல் வெளியிடப்பட்டன. இந்த ஸ்கூட்டரில் ஓட்டுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப வேகத்தை அமைத்துக்கொள்ளலாம். இதில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. க்ரூஸ் செயல்பாட்டைச் செயல்படுத்த க்ரூஸ் கண்ட்ரோல் பட்டனும் இதில் உள்ளது. அதை ஆக்டிவேட் செய்யும்போது, ​​ஸ்பீடோமீட்டரில் க்ரூஸ் சின்னம் தெரியத் தொடங்குகிறது. பிரேக்கிங் அல்லது த்ரோட்டில் மூலம் எப்போது வேண்டுமானாலும் அதை செயலிழக்கச் செய்யலாம்.


இந்த ஸ்கூட்டரில் முன் பிரேக் டிரம், பின்பலக்க பிரேக் டிரம் ஆகியவற்றைக் காண முடியும். அதன் வரம்பைப் பற்றி நாம் பேசினால், ஆப்டிமா ஒரு முறை சார்ஜில் 82 கிமீ தூரத்தை வழங்குகிறது. இதில் 51.2 V, 30 Ah பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஆக 4-5 மணி நேரம் ஆகும். இதில் பி.எல்.டி.சி மோட்டார் கிடைக்கும். மின்சார வாகன சந்தையில் இந்த ஸ்கூட்டர் இவோலெட் போலோ, யோ எட்ஜ், ஆம்பியர் ஆர்.இ.ஓ மற்றும் இவோலெட் டெர்பி ஆகியவற்றுடன் போட்டியிடும். இவற்றின் விலையும் 50 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் உள்ளது.


மேலும் படிக்க | Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள் இதோ


விலை மற்றும் வண்ணங்கள்


டெல்லி ஷோரூமில் ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா எச்எக்ஸ்-ன் (சிங்கிள் பேட்டரி) விலை ரூ.55,580 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஆப்டிமாவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வண்ணங்கள் கிடைக்கும். மாறுபாட்டின் படி, நீலம், சாம்பல், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய 4 வண்ணங்களில் விருப்பமான வண்ணங்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 


பிதம்பூர் ஆலையில் உற்பத்தி


இந்த ஸ்கூட்டர்கள் மஹிந்திராவின் ஆலையில் தயாரிக்கப்படும். ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் ஸ்கூட்டர்கள் பிதம்பூர் ஆலையில் உருவாக்கப்படுகின்றன. கூட்டாண்மையின் மூலம், இரு நிறுவனங்களும் மஹிந்திராவுக்குச் சொந்தமான பியூஜியோ மோட்டார்சைக்கிள்களின் போர்ட்ஃபோலியோவை மின்மயமாக்கும் திசையில் செயல்படும்.


ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மின் வாகனங்களை தயாரிப்பது இலக்கு


இந்த கூட்டாண்மையின் உதவியுடன், ஹீரோ எலக்ட்ரிக் ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மையின் கீழ், மஹிந்திரா மற்றும் ஹீரோ அகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து சப்ளை செயின் மற்றும் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தியில் இணைந்து செயல்படும்.


மேலும் படிக்க | Komaki Venice மின்சார ஸ்கூட்டர்: அசத்தும் அம்சங்கள், ஃபுல் சார்ஜில் 120 கிமீ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR