Used Cars: புத்தம் புது கார் போல் இருக்கும் சூப்பர் கார்களை குறைந்த விலையில் வாங்கணுமா?

மிகக் குறைந்த தூரமே பயணித்த, சற்றே புதிய காராக உள்ள, ஷோரூமில் இருந்து வெளிவரும் காரைப் போல புத்தம் புதிய தோற்றத்துடன் இருக்கும் காரை வாங்க வேண்டுமா?  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2022, 01:09 PM IST
  • பழைய காரை வாங்கும் எண்ணம் கொண்டுள்ளீர்களா?
  • அதற்கான வழிகளில் ஒன்றை இந்த பதிவில் காணலாம்.
  • புத்தம் புதிய காரை மிகக்குறைந்த விலையில் வாங்கலாம்.
Used Cars: புத்தம் புது கார் போல் இருக்கும் சூப்பர் கார்களை குறைந்த விலையில் வாங்கணுமா? title=

Used Cars / Second Hand Cars: பழைய காரை வாங்கும் எண்ணம் கொண்டுள்ளீர்களா? ஆனால், அது மிகக் குறைந்த தூரமே பயணித்த காராகவும், சற்றே புதிய காராகவும், ஷோரூமில் இருந்து வெளிவரும் காரைப் போல புத்தம் புதிய தோற்றத்துடனும் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு!!

மஹிந்திரா குழும நிறுவனமான மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கார்கள் இப்படிப்பட்டவைதான். மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ், பயன்படுத்திய கார்களின் (Used Cars) வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை இணையதளத்தில் உள்ள அட்டகாசமான கார்களின் விவரங்கள் இதோ. 

2021 MARUTI SUZUKI CIAZ ZETA

2021 மாருதி (Maruti) சுசுகி CIAZ ZETA 1.5 MTக்கு ரூ.10.25 லட்சம் விலை கோரப்பட்டுள்ளது. இந்த கார் 1800 கிலோமீட்டர் மட்டுமே ஓட்டியுள்ளது. இது பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது ஒரு சாம்பல் நிற கார். இது டெல்லியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் இணையதளத்தில் 10-க்கு 8.3 என மதிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ | ரூ. 50 ஆயிரத்துக்கு மாருதி Wagon R காரை வாங்கலாம் -முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்

2020 MARUTI SUZUKI CELERIO ZXI A/T 
2020 MARUTI SUZUKI CELERIO ZXI A/Tக்கு ரூ.5.75 லட்சம் விலை கோரப்பட்டுள்ளது. இந்த கார் 1602 கிமீ மட்டுமே ஓடியுள்ளது. இது பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். இது தானியங்கி பரிமாற்றத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு வெள்ளி நிற கார் ஆகும். இந்த கார் குருகிராமில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் இணையதளத்தில் 10க்கு 7.8 என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021 MAHINDRA XUV300 W8 OPTIONAL 

2021 MAHINDRA XUV300 W8 ​​OPTIONAL ரூ.13.5 லட்சம் எனற் விலையில் டிமாண்டில் உள்ளது. மஹிந்திராவின் (Mahindra) இந்த கார் 400 கிலோமீட்டர் மட்டுமே ஓடியுள்ளது. இந்த கார் ஒரு பெட்ரோல் எஞ்சின் காராகும். இந்த காரில், இதன் டிரான்ஸ்மிஷன் பற்றிய தகவல்கள் வழங்கப்படவில்லை. இது சிவப்பு நிற காராகும். இது டெல்லியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் இணையதளத்தில் 10-க்கு 8.5 என மதிப்பிடப்பட்டுள்ளது.

(பொறுப்புத் துறப்பு- இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் டீலரின் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டு, தகவல்களாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு பரிந்துரை அல்ல. காரை வாங்குவதற்கு முன் எப்போதும் காரின் விலை, நிலை மற்றும் ஆவணங்களை சரிபார்த்துக்கொள்வது உகந்தது) 

ALSO READ | Cheapest 7 Seater Car: குறைந்த பட்ஜெட்டில் நல்ல கார் வாங்க செம்ம சான்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News