Year Ender 2023, Headphones: 2023ஆம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. அந்த வகையில், இந்தாண்டு வெளியான பல தயாரிப்புகள் சந்தையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது. ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களின் வரிசையில் இந்தாண்டு பல ஹெட்போன்களும் வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, இந்தாண்டு Sony, Zebronics, boAt உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பல ஹெட்ஃபோன்களை சந்தையில் அறிமுகப்படுத்தின. இந்த ஹெட்ஃபோன்களின் ஒலி தரம் அபாரமாக இருந்துள்ளது. 


அனைவரும் தங்களின் தயாரிப்பில் சந்தையில் முத்திரை பதித்துள்ளனர். புத்தாண்டு தொடங்குவதற்கு முன், 2023ஆம் ஆண்டின் சிறந்த ஹெட்போன்களை இதில் காணலாம். மேலும், அவற்றின் விலை 5,000 ரூபாய்க்கும் குறைவானதாக இருக்கும். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், அவற்றை நீங்கள் எளிதாக வாங்கலாம்.


மேலும் படிக்க | 2023-ல் பாதுகாப்பு அம்சத்தில் டாப் ரேட்டிங் வாங்கிய டாப் 5 கார்கள்


Sony WH-CH520


இந்த ஹெட்ஃபோன் 50 மணிநேர பிளேபக் டைமுடன் வருகிறது. தவிர, வாய்ஸ் அசிஸ்டண்ட் செயலியின் உதவியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில், மக்கள் இந்த ஹெட்ஃபோனை மிகவும் விரும்பினர் மற்றும் ஏராளமான மக்கள் இதை வாங்கியிருக்கின்றனர். நீங்கள் இதை வாங்க விரும்பினால், 3 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம்.


BoAt Rockerz 450 Bluetooth On Ear Headphones


ஹெட்ஃபோன்களின் ஒலி தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. அதன் அபார செயல்திறனால், BoAt நிறுவனத்திந் இந்த ஹெட்ஃபோன் மக்களின் ஆப்ஷனாக உள்ளது. இது 40MM இயக்கிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது 15 மணிநேர பிளேபேக் டைமுடன் வருகிறது. இதற்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இதன் விலை 1,699 ரூபாயாகும். நீங்கள் அதை வாங்க விரும்பினால், boAt நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்.


Philips Audio TAH6506BK


இந்த ஹெட்ஃபோன் மிகவும் இலகுவானது. இதுமட்டுமின்றி, Active Noise Cancellation அம்சத்தைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக அதன் ஒலி தரம் மிகவும் நன்றாக உள்ளது. இதனுடன், 30 மணிநேர பிளேபேக் டைமும் கிடைக்கிறது. இந்த ஹெட்ஃபோன் உங்களுக்கு உயர்தர ஒலி தரத்தை வழங்கும், இது பாடல்களைக் கேட்கும் சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். இந்த ஹெட்ஃபோனை நீங்கள் வாங்க விரும்பினால், 5 ஆயிரத்து 590 ரூபாய்க்கு வாங்கலாம்.


JBL Tune 710BT by Harmanme


இந்த ஹெட்ஃபோன் 50 மணிநேர பிளேபேக் டைமுடன் வருகிறது. தவிர, விரைவாக சார்ஜ் செய்யும் ஆப்ஷனும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, AUX மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் உதவியும் இந்த ஹெட்ஃபோனில் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒலி தரம் ஆச்சர்யமளிக்கும் விதமாக இருக்கிறது, இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதை மிகவும் விரும்பினர். நீங்கள் இதை வாங்க விரும்பினால், அமேசானில் 3 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.


மேலும் படிக்க | ஐபோன் 15 மொபைலில் இல்லாதது இந்த மொபைலில் இருக்குது... தெறிக்கும் புது அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ