இந்த வேலைகளுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கும் மைக்ரோசாப்ட்..!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருக்கும் சில வேலைகளுக்கு அந்த நிறுவனம் மாதம் சம்பளமாக கோடிகளில் கொட்டிக் கொடுக்கிறது.
இன்ஜினியரிங் மற்றும் ஐடி கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் அனைவரும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பதே கனவாக இருக்கும். குறிப்பாக, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. கௌரவமான பணியிடம் என்பது மட்டுமில்லாமல், கை நிறைய சம்பளத்தை கொடுக்கும் நிறுவனங்களாகவும் அவை இருக்கின்றன.
ALSO READ | விரைவில் வருகிறது மலிவு விலை 5G போன்: அசத்த காத்திருக்கும் Apple நிறுவனம்
இவை தவிர, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், குடும்பங்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இது தொடர்பாக அண்மையில், பிசினஸ் இன்சைடர் (Business insider) நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதிக சம்பளத்தை பெறும் பணியிடம் எது? என நடத்திய ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச்-1 பி விசாவில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், மற்ற விஷயங்களுடன் சம்பளம் பற்றிய தகவலையும் அந்த நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் ஹெச்-1 பி விசாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்களின் தகவலை பிஸ்னஸ் இன்சைடர் ஆய்வுக்குட்படுத்தியது. அதில், சேல்ஸ் மேனேஜராக பணியாற்றுபவர்களுக்கு அதிக ஊதியத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுக்கிறது. அந்த அறிக்கையின்படி சேல்ஸ் மேனேஜர் சுமார் 1.83 கோடி ரூபாய் மாத சம்பளமாக பெறுகிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் சேல்ஸ் மேனேஜர்களுக்கு கொடுக்கும் சராசரி சம்பளம் இதுவல்ல. அதிகபட்ச சம்பளம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவை தவிர சாப்ட்வேர் என்ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள் (Researchers) அதிக ஊதியத்தை பெறுகின்றனர். அவர்களுக்கான அதிகபட்ச ஊதியம் குறிப்பிடப்படவில்லை. மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் ஊதியத்தில் போனஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
ALSO READ | Google: பிரைவசிக்காக கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR