தலைநகர் டெல்லியில் புல்டோசர் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு அகற்றப்படும் நிலையில், முஸ்லீம் வீடுகள் மட்டும் குறிவைத்து இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை பாஜக வரவேற்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. பாஜகவின் பிருந்தா காரத், நேரடியாக களத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்து நிறுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதன்முதலில் புல்டோசர் கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும் கலாச்சாரத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்ததார். இதனால் அவர் ’புல்டோசர் பாபா’ என அழைக்கப்படுகிறார். இந்த கலாச்சாரத்தை பின்பற்றிய சிவராஜ் சிங் சவுகான் ’புல்டோசர் மாமா’ என பட்டப்பெயருடன் குறிப்பிடப்படுகிறார். தற்போது இந்திய அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த புல்டோசர் எங்கிருந்து வந்தது? என்பதை தெரிந்து கொள்வோம். 


மேலும் படிக்க | மே 11 முதல் கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு ஆப்பு - கூகுள் சொல்லும் காரணம்


புல்டோசர் உருவானது எப்படி?


புல்டோசர் யார் கண்டுபிடித்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பெஞ்சமின் ஹோல்ட் என்பவர் 1904 ஆம் ஆண்டில் நீராவி இழுவை இயந்திரத்திற்காக சங்கிலி இழுவையை உருவாக்கியுள்ளார். இதில் இருந்து  இங்கிலாந்தின் ஹார்ன்ஸ்பை நிறுவனம் சக்கர நீராவி இழுவை இயந்திரம் ஒன்றை டிராக்லேயர் வகையாக மாற்றியது. ஆனால் இவை புல்டோசர்கள் அல்ல. Hornsby மாடல் இன்றைய புல்டோசர் மாடலுக்கு நெருக்கமாக உள்ளது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் புழக்கத்தில் மிக மிக குறைவாக இருந்ததை அறியமுடிகிறது. 


டிராக்டர் உருவாக்கப்படுவதற்கு முன்பே பிளேடுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இந்த டோசர் பிளேடுகள் வாகனத்தின் முன்பகுதியில் பொருட்களை நகர்த்துவதற்கும், கடினமான நிலப்பரப்பில் செல்லவும், மணல் மற்றும் குப்பைகளை தள்ளுவதற்கும் பொருத்தப்பட்டது. இந்த புல்டோசர் பிளேடுகளில் ஸ்ட்ரைட் பிளேடு, யுனிவர்சல் பிளேடு, S-U ஹைப்ரிட் பிளேடு என 3 வகைகள் உள்ளன. இவற்றின் தன்மையைப் பொறுத்து ராணுவத்தில் கூட பயன்படுத்தப்படுகின்றன. 



மண்களை வெட்டவும் சமன்படுத்தவும் பயன்படும் புல்டோசர்கள், நவீன வளர்ச்சிக்கு ஏற்ப சங்கிலி சக்கரம் மற்றும் ரப்பர் சக்கரம் என பல மாறுதல்களில் உள்ளன. சுரங்கங்கள், குவாரிகள், விவசாய நிலங்கள் மற்றும் கட்டுமான இடங்களில் புல்டோசருக்கு அதிக  வேலை இருக்கிறது. இஸ்ரேலில் கவச பாதுகாப்புடன் இருக்கும் புல்டோசர்கள் ராணுவம் மற்றும் மீட்பு பணிகளுக்கு முக்கியமாக பயன்படுத்தும் வாகனமாக உள்ளது. ஹிட்லரின் படையில் கவச டோசர்கள் மற்றும் டேங்க் டோசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சென்சார்களும் இருந்துள்ளன. இத்தகைய வரலாற்றைக் கொண்ட புல்டோசர்கள் இப்போது அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 


மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோவை கலங்கடிக்கும் BSNL திட்டங்கள்: எக்கச்சக்க நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR