விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள்
இந்தியாவில் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் பைக்குகள் இவைதானாம்.
நீங்களும் பைக் பிரியர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஏனென்றால், எந்த பைக்குகள் உங்களுக்கு நல்லது மற்றும் மலிவானது என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
Hero Splendor Plus எப்போடதும் பிரபலமான பைக் என்றாலும், அண்மையில் விற்பனையில் கொடிகட்டிப் பறந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 2,34,085 பேர் வாங்கியுள்ளனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.67,030. இந்த நிறுவனம் சமீபத்தில் Splendor Plus XTEC என்ற புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,900. இது லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும்.
மேலும் படிக்க | பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும்
ஹோண்டா சிபி ஷைன்
ஏப்ரல் மாதத்தில் 1,05,413 பேர் ஹோண்டா சிபி ஷைனை வாங்கியுள்ளனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.75,185. இதில் 124 சிசி இன்ஜின் உள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும். இதன் எஞ்சின் 10.59 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகிறது. விற்பனையில் இந்த பைக் இரண்டாவது இடத்தில் உள்ளது.
எச்எஃப் டீலக்ஸ்
எச்எஃப் டீலக்ஸ் ஏப்ரல் மாதத்தில் 1,00,601 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.52,256-ல் தொடங்கி ரூ.63,754 வரையில் உள்ளது. இது 97.2 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 65 கிமீ மைலேஜை கொடுக்கிறது.
பஜாஜ் பல்சர்
ஏப்ரல் 2022-ல் பஜாஜ் பல்சர் 46,040 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. எக்ஸ்ஷோரூம் விலை ரூ.78,495-ல் தொடங்குகிறது. இந்த விலை 125-சிசி மாடலுக்கானது. ஒரு லிட்டர் பெட்ரோலில் 50 கிமீ வரை செல்ல முடியும். இந்த பைக் விற்பனையில் நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | கார் பராமரிப்பு கண்ணை கட்டுதா? இந்த டிப்ஸ் சிறந்த மைலேஜ் பெற உதவும்
பஜாஜ் பிளாட்டினா
பஜாஜ் பிளாட்டினா ஏப்ரல் 2022-ல் 35,467 பைக்குகளை விற்றுள்ளது. விற்பனையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த பைக், 100 சிசி மற்றும் 110 சிசி இன்ஜின்களுடன் வருகிறது. 100 சிசி பிளாட்டினாவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.52,844. இது லிட்டருக்கு 72 கிமீ மைலேஜ் கொடுக்கும். அதே நேரத்தில், 110 சிசி பிளாட்டினா ரூ.64,547 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 கி.மீ வரை செல்லலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR