சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும், நேரத்தைச் சேமிப்பதற்கும், தங்கள் ஊழியர்களுக்கு உதவுவதற்கும், அவர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், அதிக பணம் சம்பாதிப்பதற்கும் வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை அதிகமான வணிக உரிமையாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக AI-ன் ஆற்றலைப் பயன்படுத்தி வருகின்றன. இப்போது சிறிய வணிகங்களுக்கு குறைந்த பட்ஜெட்டில் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் சூழல் உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேரத்தை பணமாக்கும் ஏஐ தொழில்நுட்பங்கள்


கார் டீடெய்லிங் பிளானட்டின் உரிமையாளர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன் குறித்து பேசும்போது, நீங்கள் உங்கள் தொழிலில் அதிக லாபம் பெற ஒரு தொழில்நுட்ப வல்லுநராக இருக்க வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரை, AI ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க சவாலாக இருந்த மொழி தடைகளை இது சுபலமாக நீக்கியுள்ளது. எனது உலகளாவிய வாடிக்கையாளர் தளத்துடன் திறம்பட மற்றும் துல்லியமாக தொடர்புகொள்வதற்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன். 


மேலும் படிக்க | பணத்தை பணமடங்காக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்... முதிர்வின் போது கையில் ₹64 லட்சம் கிடைக்கும்!


எனது இணையதளத்திற்கான தெளிவான, சுருக்கமான கட்டுரைகளை உருவாக்குவதில் இது எனக்கு உதவுகிறது.   இதன் மூலம் எனக்கு கணிசமான அளவு பணத்தை மிச்சப்படுகிறது. வணிக உலகில் ஒரு சில மணி நேரங்களும் பணத்திற்கு சமமானது என்பதால் ஏஐ தொழில்நுட்பங்கள் மிகப் பெரிய வேலையைக் கூட மிக சாதாரணமாக முடிக்க உதவுகிறது. நாம் பிறரை தேடிக் கொண்டிருக்க தேவையில்லை. உங்களது சந்தேகங்களையும்கூட இதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என கூறினார்.


சிறந்த மார்கெட்டிங்கிற்கு உதவும் ஏஐ


மெஷின் லேர்னிங், AI மற்றும் மென்பொருள் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மென்பொருள் பொறியாளராக, Neural Network Press-ன் வெளியீட்டாளரான Martijn van Nieuwenhoven பேசும்போது, வணிக உரிமையாளர்கள் தொழில்நுட்பத்திலிருந்து எவ்வாறு லாபம் பெறலாம் என்பதை நேரடியாகக் பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பு, மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் AI பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அடிக்கோடிட்டு கூறியுள்ளார். புதுமையான தயாரிப்பு யோசனைகள், அவற்றை நுணுக்கமாக வடிவமைத்தல் மற்றும் அவற்றை சந்தைப் படுத்துவதிலும் AI உதவியை நீங்கள் தாராளமாக நாடலாம் என கூறும் அவர், இதன் மூலம் மிகப்பெரிய அளவில் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கலாம் என கூறியுள்ளார். 


கன்டென்டு கிரியேஷன்


ஏஐ தொழில்நுட்பங்கள் பெரும் வீச்சை ஏற்படுத்தியிருக்கும் துறை என்றால் அது கன்டென்ட் எனப்படும் உள்ளட்டக்கம் உருவாக்கத்தில் தான். புதிய கன்டென்டுகள் மற்றும் அதற்கான யோசனைகளை ஏஐ தொழில்நுட்பங்களால் எளிதில் உருவாக்கவும் முடியும். தரவு பகுப்பாய்வில் ஏஐ தொழில்நுட்பம் மற்றொரு அசாத்திய வீச்சை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிழைகளை எளிதில் நீக்கிவிட ஏஐ உதவுகிறது. இவையெல்லாம் எளிதில் பணம் சம்பாதிக்கவும், செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது. 


AI மூலம் மோசடிகளை கண்டறிதல் 


வணிக தரவு, ரகசியங்கள், நிதி மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க AI ஐப் பயன்படுத்தலாம். மேலும், மோசடிகள் மற்றும் பாதுகாப்பு மீறல்களில் இருந்து நிதி இழப்புகளைத் தவிர்க்க நிறுவனங்களுக்கு உதவுகின்றன. 


மேலும் படிக்க | குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க... இந்த வங்கிகள் சிறப்பான தேர்வாக இருக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ