சாட்ஜிபிடி வருகைக்குப் பின்னர் டெக் உலகம் ஒரே குஷியில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சாட்ஜிபிடி, உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே நொடியில் கொண்டு வந்து கொடுத்துவிடும். சரியாக இதனை பயன்படுத்தினால் இது பணம் சம்பாதிக்க வைக்கும் சிறந்த நிதி ஆலோசகராக இருக்கும். இதில் இப்போது அடுத்தடுத்த வெர்சன்களை ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சாட்ஜிபிடி பிளஸ் பல்வேறு நாடுகளில் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியாவுக்குள் இப்போது தான் காலடி எடுத்து வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போது இந்தியாவுக்கான சப்ஸ்கிரிப்சனை வெளியிடுவார்கள் என இந்திய டெக் உலகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மேன் ஒரு டிவிட்டை வெளியிட்டார். அதில், இந்தியாவிலும் சாட்ஜிபிடி பிளஸ் சப்ஸ்கிரிப்சன் இனி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நாங்கள் இந்தியாவை வணங்குகிறோம். நல்ல செய்தி என்னவென்றால் ChatGPT Plus-க்கான சந்தாக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்


அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியின் அடுத்த மற்றும் அட்வான்ஸ் வெர்சனான GPT-4 ஐ வெளியிட்டது. இது சாட்ஜிபிடியை விட மிகவும் அட்வான்ஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடிக்கு கிடைத்த ரிவ்யூக்கள் மூலம் சாட்ஜிபிடி பிளஸ் மற்றும் ஜிபிடி 4 வெர்சன்கள் அப்கிரேடு செய்யப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக தொழில்நுட்ப அம்சங்களும் அதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் கிராபிக்ஸ் முதல் வீடியோ உருவாக்கம் வரை அனைத்து மேம்படுத்தப்பட்ட அம்சத்தில் ஜிபிடி4 வெர்சனில் கிடைக்கும்.   


GPT4 அணுகலை பெறுவது எப்படி?


* GPT-4 ஐப் பெற, உங்களுக்குத் தளத்தின் கட்டணப் பதிப்பு, ChatGPT+ தேவைப்படும். 


* https://chat.openai.com/-ல் ChatGPT தளத்தைத் திறக்கவும்


* உங்களிடம் ஏற்கனவே ChatGPT+ அணுகல் இருந்தால், தளம் உங்களை நேரடியாக ChatGPT4க்கு அழைத்துச் செல்லும்.


* உங்களிடம் பிரீமியம் பதிப்பு இல்லையென்றால், 'அப்கிரேட் டு பிளஸ்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 


* மேம்படுத்தல் விருப்பம் இலவச மற்றும் பிரீமியம் பதிப்புகளுக்கு இடையே உள்ள ஒப்பீட்டைக் காண்பிக்கும்


* பைப்பருக்கு பணம் செலுத்தியவுடன், சாட்போட்டின் சமீபத்திய பதிப்பிற்கான முழு அணுகலைப் பெறுவீர்கள்.


புதிய சாட்-ஐத் தொடங்கும் போது, பழைய மாடல்களில் ஒன்றை அல்லது GPT-4 ஐப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை இழுத்தல் உங்களுக்கு வழங்கும். ChatGPT-4 மற்ற மாடல்களை விட மெதுவாக உள்ளது. ஆனால் தேடல்களுக்கு அது கொடுக்கும் பதில்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் இருக்கின்றன. நீங்கள் Bing பயனராக இல்லாவிட்டால், சமீபத்திய வெர்சனை இலவசமாக அணுகுவதற்கு தற்போது எந்த வழியும் இல்லை. மைக்ரோசாப்ட் - சமீபத்தில் ChatGPT தாய் நிறுவனமான OpenAI-ல் பில்லியன்களை முதலீடு செய்தது. இதனால், AI-ன் சமீபத்திய பதிப்பின் மூலம் அவர்களின் சாட்போட் இயங்குகிறது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | ChatGPT: சாட்ஜிபிடி4-ஐ எப்படி பயன்படுத்துவது? OpenAI-ன் புதிய அணுகலை பெற வழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ