ஏர்செலிருந்து வேறு நெட்வொர்க் மாறுவது எப்படி? -விவரம் உள்ளே!
மார்ச் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் ஏர்செல் முழுமையாக மூடப்படுவதாக டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்க கோரி ஏர்செல் நிர்வாகம் மனு கொடுத்துள்ள நிலையில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஏர்செல் மூடப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிரமத்திலிருந்து தப்பிக்க எளிய வழியும் உள்ளது. ஏர்செல் மொபைல் சிக்னல் கடந்த சில வாரங்களாக தடைபட்டது. இதனால், அதன்
வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே நேற்று மார்ச் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் ஏர்செல் முழுமையாக மூடப்படுவதாக டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஒரேயொரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு தங்களது எண்ணை மாற்றி சிரமத்திலிருந்து தப்பிக்கலாம்.
ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது...!
> தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று அங்கு நீங்களாகவே (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும்.
> அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2-ஜியை தேர்வு செய்ய வேண்டும்.
> பின்பு PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும். [PORT 1234567890 (send to 1900)].
> இதன் மூலம் மொபைல் போர்ட்டபிளிட்டி எட்டு இலக்கு எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும்.
> அந்த எண் மூலம் நீங்கள் வேறு நெட்வொர்க் மொபைல் சேவைக்கு மாறலாம்.
> இந்த முறை மூலம் உங்ளது மொபைல் எண் மாறாது.
பின்னர் வழக்கம்போல உங்களது எண்ணை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். இந்த சேவையிலும் பல குறைபாடுகள் நிலவுகிறது. சில சமயம் எஸ்.எம்.எஸ் செல்வதில்லை.