அதிகமாக SPAM கால் வருகிறதா? ப்ளாக் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பெரிதும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் ஸ்பேம் அழைப்புகள், இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்ட மக்களிடையே ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது, மக்களுக்கு இது உதவிகரமானதாக இருந்தாலும், மக்களை எரிச்சலூட்டும் வகையில் ஸ்பேம் அழைப்புகளும் அதிகரித்து வருகின்றன. நம்மை எரிச்சலடைய செய்யும் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்ய பல வழிகள் உள்ளது, மொபைலின் டயலர் செயலிகளில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்தி எளிதாக பிளாக் செய்யலாம். கூகுள் போனை டீஃபால்ட் டயலராக பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு சாதனங்கள், ஆப் செட்டிங்கில் ஸ்பேம் அழைப்புகளை ஃபில்டர் செய்யும். இருப்பினும், சாம்சங் போன்ற நிறுவனங்களின் மொபைல்களில் ஸ்பேம் ஃபில்டர்கள் வேறுபட்டு இருக்கக்கூடும். பட்ஜெட் விலையை கொண்ட ஆண்ட்ராய்டு போனாக இருந்தாலும் சரி, அதிக விலையை கொண்ட ஆண்ட்ராய்டு போனாக இருந்தாலும் சரி, உங்கள் மொபைலில் ஸ்பேம் அழைப்புகளை எப்படி பிளாக் செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | Jio IPL Plans: ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பாருங்க... டேட்டாவை வாரிவழங்கும் ஜியோ!
ஸ்பேமர்கள் பல வழிகளில் உங்கள் மொபைல் எண்ணைப் பெறலாம், பெரும்பாலான ஸ்பேமர்கள் டெலிமார்க்கெட்டர்கள் ஆக இருக்கின்றனர். அவர்கள் மூன்றாம் தரப்பு தரவு வழங்குநர்களிடமிருந்து தொலைபேசி எண்களின் பட்டியலை வாங்குகிறார்கள். எனவே இனிமேல் உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து வரும் விற்பனை அழைப்புகளைத் தவிர, ஸ்பேம் அழைப்புகள் தானியங்கி ரோபோகால்கள் மற்றும் மோசடி அழைப்புகள் வரலாம். உதாரணமாக வங்கியிலிருந்து அதிகாரிகள் பேசுவது போல பேசி நமது தனிப்பட்ட தகவல்களை கேட்பார்கள், இதுபோன்ற அழைப்புகள் வந்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கூகுள் ஃபோன் செயலியை பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்தல்:
- மொபைலிலுள்ள ஆப்பை திறக்க வேண்டும்.
- மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டி, செட்டிங்கிற்கு செல்லவும்.
- அசிஸ்டிவ் பகுதியில் 'காலர் ஐடி & ஸ்பேம்' என்பதைத் தேர்வு செய்யவும்.
- ஸ்பேம் அழைப்புகளைத் ஆட்டோமேட்டிக்காக பிளாக் செய்ய பில்டர் ஸ்பேம் அழைப்புகளை மாற்ற வேண்டும்.
கூகுளின் ஸ்பேம் பில்டர் பயன்படுத்தும்போது சில சமயங்களில் டெலிவரி ஊழியர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஆப்ஸ் ஸ்பேமாக கருதுகிறது, இதனால் சில இ-காமர்ஸ் தளங்களிலிருந்து வரக்கூடிய பார்சல்களைத் தவறவிட நேரிடும். இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் ஸ்பேம் ஃபில்டரை ஆஃப் செய்து 'சீ காலர் அண்ட் ஸ்பேம் ஐடி' என்பதை எனேபிள் செய்யவேண்டும்.
மேனுவலாக ஸ்பேமர்களை பிளாக் செய்தல்:
- மொபைலிலுள்ள செயலியை திறக்க வேண்டும்.
- எந்த நம்பரை பிளாக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.
- பிளாக் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | CHATGPT: ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி பயன்படுத்துவது எப்படி?