Tatkal Ticket: ஆன்லைனில் எளிதாக புக் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ
Tatkal Ticket Booking: தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்கள் சுகமான அனுபவத்தை அளித்தாலும், அதற்கான டிக்கெட் முன்பதிவு அத்தனை எளிதாக நடப்பதில்லை.
Tatkal Ticket Booking: ரயில் போக்குவரத்து இந்தியாவின் உயிர் நாடியாக பார்க்கப்படுகின்றது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்கள் சுகமான அனுபவத்தை அளித்தாலும், அதற்கான டிக்கெட் முன்பதிவு அத்தனை எளிதாக நடப்பதில்லை. குறிப்பாக, பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
இப்படிப்பட்ட தருணங்களில் ஐஆர்சிடிசி -இன் தத்கால் முன்பதிவு சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அவசரமாக டிக்கெட் தேவைப்படுபவர்களுக்கு கடைசி நிமிட முன்பதிவு விருப்பங்களை இது வழங்குகிறது.
திடீரென பயணம் செய்யும் நபர்களுக்கு தத்கால் டிக்கெட் முன்பதிவு பயனுள்ளதாக இருந்தாலும், இதற்கான தேவை பயணிகளிடையே அதிகமாக இருப்பதால், இதன் முன்பதிவு செயல்முறை பல சமயங்களில் சவாலாகவே உள்ளது. தத்கால் டிக்கெடை வெற்றிகரமாக முன்பதிவு செய்ய, ஐஆர்சிடிசி கணக்கு, தெளிவான பயணத் திட்டம் மற்றும் வேகமான இணைய இணைப்பு ஆகியவற்றுடன் தயாராக இருக்க வேண்டும். தத்கால் டிக்கெட்டை திறம்பட முன்பதிவு செய்வதற்கான படிகள் மற்றும் குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் தத்கால் ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான வழிமுறை:
ஸ்டெப் 1: IRCTC இணையதளத்திற்குச் சென்று லாக் இன் செய்யவும்.
irctc.co.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் லாக் இன் செய்ய IRCTC பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். உங்களிடம் கணக்கு இல்லையென்றால், "Sign Up" பொத்தானைக் கிளிக் செய்து, பயனர் ஐடியை உருவாக்க வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 2: தத்கால் புக்கிங்கைத் தேர்ந்தெடுக்கவும்
"புக் டிக்கெட்" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தட்கல் முன்பதிவைத் தேர்வு செய்யவும்
“தத்கால்” முன்பதிவு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். புறப்படும் மற்றும் சேருமிட நிலையங்கள், பயணத் தேதி, ரயில் எண் மற்றும் பயண வகுப்பு உட்பட அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
தத்கால் முன்பதிவு எப்போது தொடங்கும்?
- ஏசி வகுப்பிற்கு தத்கால் புக்கிங் காலை 10 மணிக்கு தொடங்கும்.
- நான்-ஏசி வகுப்பிற்கு தத்கால் புக்கிங் காலை காலை 11 மணிக்கு தொடங்கும்.
- ரயில் புறப்படுவதற்கு சரியாக ஒரு நாள் முன்பு முன்பதிவு தொடங்கும்.
- முன்பதிவு நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் இருப்பது, டிக்கெட்டுகளை அணுகும் முதல் நபர்களில் ஒருவராக இருக்க உதவுகிறது.
ஸ்டெப் 4: பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்
பயணம் செய்யும் நபரின் பெயர், முகவரி, ரயில் புறப்பாடு மற்றும் வருகை, தொலைபேசி எண் போன்ற முன்பதிவு செய்வதற்கு தேவையான பயணிகளின் விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 5: பெர்த் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
லோயர் பர்த்துகள் பொதுவாக வயதான பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்பதை மனதில் வைத்து, பெர்த் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
ஸ்டெப் 6: கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்
கட்டணம் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்த்து, பின்னர் கட்டணப் பக்கத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 7: கட்டண முறையைத் தேர்வு செய்யவும்
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், UPI அல்லது கிடைக்கக்கூடிய பிற விருப்பங்களில் உங்கள் விருப்பமான கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 8: முன்பதிவை உறுதிசெய்து பணம் செலுத்துங்கள்
முன்பதிவு விவரங்களைச் சரிபார்த்து, கட்டணத்தை செலுத்தவும். வெற்றிகரமாக கட்டணத்தை செலுத்திய பிறகு, பயணத்திற்கான உங்கள் இ-டிக்கெட்டைப் பதிவிறக்கவும்.
ஐஆர்சிடிசி செயலி மூலம் தத்கால் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
ஸ்டெப் 1: IRCTC செயலியைப் பதிவிறக்கவும்
ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளேயில் IRCTC செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும். செயலியைத் திறந்து உங்கள் IRCTC கணக்கில் லாக் இன் செய்யவும்.
ஸ்டெப் 2: தத்கால் முன்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்
"தத்கால் முன்பதிவு" விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் ரயில் மற்றும் பயணத் தேதியைத் தேர்வு செய்யவும்
நீங்கள் விரும்பும் ரயில் மற்றும் பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: பயணிகளின் விவரங்களை நிரப்பவும்
டிக்கெட்டுக்கு தேவையான பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்.
ஸ்டெப் 5: இருக்கை வகுப்பு மற்றும் பெர்த் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
உங்களுக்கு விருப்பமான இருக்கை வகுப்பு மற்றும் பெர்த் வகையைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 6: கட்டண விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்
கட்டண விவரங்களைச் சரிபார்த்து, உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்தவும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் செயல்பாட்டைத் தொடரவும்.
ஸ்டெப் 7: கட்டண நிலையைச் சரிபார்க்கவும்
கட்டண நிலையைக் கண்காணித்து, உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கவும்.
ஸ்டெப் 8: உங்கள் டிக்கெட்டைப் பதிவிறக்கவும்
கட்டணம் உறுதிசெய்யப்பட்டதும், உங்கள் டிக்கெட்டை நேரடியாக செயலியிலிருந்து பதிவிறக்கவும்.
தத்கால் முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்
நிலையான இணைய இணைப்பு
குறுக்கீடுகளைத் தடுக்க நம்பகமான, அதிவேக இணைய ஆதாரத்துடன் இணைக்கவும். மொபைல் ஹாட்ஸ்பாட்கள் அல்லது நிலையற்ற நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
கேப்ட்சா ப்ராக்டிஸ்
கட்டணம் செலுத்தும் முன் கேப்ட்சா எண்ட்ரி தோன்றும். இதனால் தாமதல் ஏற்படுவதைத் தவிர்க்க, கேப்ட்சா குறியை உள்ளிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ளவும்.
தகவல்களை அருகில் வைத்திருங்கள்
நேரத்தை மிச்சமாக்க, பயணம் செய்பவரின் பெயர், வயது மற்றும் பிற விவரங்களை தயாராக வைத்திருங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ