புதுடெல்லி: மெட்டா நிறுவனம் நீண்ட காலமாக அதன் 3D அவதார் பற்றி தெரிவித்து வருகிறது. Facebook, Messenger, Instagram இன் தாய் நிறுவனமான மெட்டாவின் புதிய 3D அவதாரத்தை இனி பயனர்கள் பயன்படுத்த முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெட்டா நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட அவதாரத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. இப்போது அனிமேஷன் செய்யப்பட்ட 3D அவதாரத்தை நேரடி செய்திகள் மூலம் நீங்கள் அனுப்பலாம். அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


மேம்படுத்தப்பட்ட மெட்டாவின் சிறப்பு அம்சங்கள்


Facebook, Instagram மற்றும் Messenger இல் 3D அவதாரை உருவாக்குவது எப்படி
முதலில் உங்களுக்கு தேவையான செயலியைத் திறந்து, மெனுவைக் கிளிக் செய்யவும்.
கீழே சென்று 'Edit your Avatar''(உங்கள் அவதாரத்தைத் திருத்து) என்பதைக் கிளிக் செய்யவும்.
Facebook இல் தனிப்பயனாக்க பல விருப்பங்கள் உள்ளன.
இந்த விருப்பங்களைப் பயன்படுத்தி, உங்கள் அவதாரத்தின் உடை, முக வடிவம், கண்கள் மற்றும் முடி ஆகியவற்றை அமைக்க முடியும்.



திருத்தப்பட்ட அவதாரத்தை எப்படி பகிர்வது
அவதாரத்தைப் பகிர, அவதார் (Avatar) பகுதிக்குச் செல்லவும்
அதன் பிறகு கீழே ஸ்க்ரோல் செய்து, Share to Feed option (ஷேர் டு ஃபீட்) ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இப்போது உங்கள் பதிவில் பகிர அவதாரம் ரெடி
இதேபோல், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவதாரத்தை உருவாக்க முடியும். இதைச் செய்ய, நீங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறுமுறைகளை பின்பற்றவும்.


மேலும் படிக்க | உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி?


மெசஞ்சரில் இதுபோன்ற ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தலாம்
முதலில் மெசஞ்சர் செயலியைத் திறக்கவும்
இப்போது உங்கள் நண்பர் ஒருவருடனான உங்கள் தகவல் தொடர்பைத் திறந்து சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
பின்னர் ஸ்டிக்கர் விருப்பத்தை கிளிக் செய்யவும்
உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும்


மேலும் படிக்க | 5G Phones: ரூ.20,000-க்குள் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR