கூகுள் மேப் மூலம் சம்பாதிப்பது எப்படி?
தெரியாத ஊர்களுக்கு வழி காண்பிப்பது மட்டுமல்ல, கூகுள் மேப் மூலம் நீங்கள் சம்பாதிக்கவும் செய்யலாம்
கூகுள் மேப்ஸ் பொதுவாக சரியான வழிகளை பார்க்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப்ஸ் சம்பாதிப்பதற்கான ஒரு பெரிய வழியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம், நீங்கள் Google மேப்பில் இருந்து சம்பாதிக்க விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த ஆலோசனையை வழங்குகிறோம். இது இருப்பிடத் தகவலுடன் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. கூகுள் மேப் பிசினஸ் சரிபார்ப்பு (Google Map business ) தொடர்பான புதிய கொள்கையை கூகுள் செயல்படுத்தியுள்ளது என்பதை எங்களுக்குத் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடியே அதிக வருமானம் ஈட்டுவது எப்படி என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | உஷார் மக்களே! வங்கிக் கணக்கை காலி செய்யும் மோசமான செயலி
கூகுள் மேப்ஸில் இருந்து சம்பாதிப்பது எப்படி?
லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, நீங்கள் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தினால், கூகுளில் பட்டியலிடப்பட்டுள்ள வணிக கணக்குகளை நீங்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதில் சரிபார்க்கப்படாத வணிகத்தைச் சரிபார்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், வணிகத்தின் உரிமையாளர்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும், அதில் வணிகத்தை Google வரைபடத்தில் பட்டியலிடுவது எப்படி? என்பதை வணிக உரிமையாளருக்கு விளக்குவீர்கள். ஏனெனில் Google -ன் புதிய கொள்கையின்படி, ஒரு வணிகம் சரிபார்க்கப்படவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதனால் வணிக கணக்கு நீக்கப்படாமல் இருக்க நீங்கள் உதவி செய்வதன் மூலம் அதிகபட்சம் 3700 ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம்.
கூகுள் மேப் வெரிஃபைடு பிசினஸ் என்றால் என்ன?
காஃபி கடை அல்லது உணவகத்தை கூகுள் மேப்பில் தேடும்போது, சில கடைகள் கூகுளில் காண்பிக்கும். அந்தக் கடைகளின் அனைத்து தகவல்களும் முழுமையாக இருந்தால் மட்டுமே கூகுள் மேப் மூலம் வாடிக்கையாளர்கள் பார்த்து அந்த கடைக்கு செல்ல முடியும். சரியான தகவல்கள் கொடுக்கப்படாத கடைகள் கூகுள் மேப்பில் இருந்து நீக்கம்படும். இத்தகைய கடைகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து முழுமையான தகவல்களை பெற்று நீங்கள் கூகுள் மேப்பில் அப்டேட் செய்ய வேண்டும். இதற்காக, அந்தக் கடைக்காரரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை டீல் பேசி கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம். அவர்களுடைய பிஸ்னஸூம் வளரும். நீங்களும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR