Instagram Hacks: இன்ஸ்டாவில் போட்டாவை டெலீட் செய்யாமல் மறைப்பது எப்படி?
Instagram Hacks: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களின் புகைப்படங்களை டெலீட் செய்யாமலேயே மறைத்து வைப்பது எப்படி என இதில் காணலாம்.
Instagram Hacks: இன்ஸ்டாகிராம் என்பது பல்வேறு புகைப்படங்கள், வீடியோவை பிரதானமாக கொண்ட சமூக வலைதளம். அனைவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சில மட்டும் பார்க்கும் வகையில் தனிக்கணக்காகவும் (Private Account) நிர்வகிக்கலாம்.
இருப்பினும், கணக்கின் பாலோயர்ஸ் மற்றும் லைக் எண்ணிக்கை அதிகரிக்க விரும்புபவர்கள் பொது கணக்கையே (Public Account) வைத்திருப்பார்கள். பொது கணக்காக இருப்பதால் பலரும் தங்களின் புகைப்படங்களை பார்ப்பார்கள் என்பதால் அதனை சிலர் தங்களின் கணக்கில் இருந்து டெலீட் செய்துவிடுவார்கள்.
ஆனால், நீங்கள் டெலீட் செய்யாமலே உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் சிலவற்றைத் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பினால், அதற்கு Archive அம்சத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம் உங்கள் சுயவிவரம் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்களிடம் இருந்து புகைப்படங்களை பயன்பாட்டில் இருந்து டெலீட் செய்யாமலேயே மறைக்க அனுமதிக்கிறது. நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றினால், அவற்றை Archive இருந்தும் நீக்கிக் கொள்ளலாம்.
அதாவது, நீங்கள் முன்பு என்ன தேதியில், என்ன முறையில் அப்லோட் செய்தீர்களோ அதேபோன்று அப்படியே வந்துவிடும். இந்த அம்சம் உங்களுக்கு பயன்படும் என்றால், அதை செயல்படுத்த விரும்பினால், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைக் Archive செய்வதற்கும், அதனை நீக்குவதற்குமான படிகளை இதில் காணலாம்.
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை டெலீட் செய்யாமல் மறைப்பது எப்படி?
- இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து உங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
- நீங்கள் மறைக்க விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து, அதன் மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி கொண்ட ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
- காட்டப்படும் மெனுவில் "Archive" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது நீங்கள் மட்டுமே அணுகக்கூடிய மறைக்கப்பட்ட பக்கத்திற்கு புகைப்படத்தை நகர்த்தும்.
- நீங்கள் Archive செய்த புகைப்படங்களை பார்க்க, உங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் சென்று, மேல் இடது மூலையில் உள்ள ஹாம்பர்கர் ஐகானைத் தட்டவும்.
மீட்டெடுப்பது எப்படி?
- Archive செய்யப்பட்ட புகைப்படத்தை மீட்டெடுக்க, அதை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் இருந்து "Show In Profile" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது புகைப்படத்தை உங்கள் சுயவிவரப் பக்கத்திற்கு மீண்டும் கொண்டு வரும்.
இன்ஸ்டாகிராம் என்பது உங்களுக்கு நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமின்றி பொது வெளியில் உள்ள அனைவருக்கும் புகைப்படம், வீடியோ, ஸ்டோரி போன்றவற்றை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது. இதில் நீங்கள் ஒரு பதிவில் 10 ஸ்லைடுகளை கூட பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் கடந்த கால நினைவுகளை அசைப்போடவும் இன்ஸ்டாகிராம் பயன்படும்.
மேலும் படிக்க | 30 நிமிடம் தண்ணீரில் மூழ்கினாலும் ஏதும் ஆகாத 5ஜி போன் வெறும் 6 ஆயிரம் மட்டுமே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ