இன்றைய உலகில், மெசேஜிங்கிற்கு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் கூட இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் அதில் இருக்கும் தனியுரிமைப் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்தான். அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில் இருக்கும் சில அம்சங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பலருக்கு தெரிந்திருக்கவில்லை.  உதாரணமாக உங்களின் தனிப்பட்ட சாட்டிங்கை நீங்கள் லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். இதுவரை அது எப்படி என தெரியாமல் இருந்தால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாட்ஸ் அப் Chat Lock அம்சம்


வாட்ஸ்அப்பின் இந்த புதிய சிறப்பு அம்சத்தின் பெயர் Chat Lock. இந்த புதிய அம்சம் அனைத்து வகையான ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் கிடைக்கிறது. உங்கள் நண்பர் அல்லது உறவினருடன் தனிப்பட்ட அரட்டையில் ஈடுபட விரும்பினால், சாட்டிங்கை லாக் செய்து வைத்துக் கொள்ளும் இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


மேலும் படிக்க | ரூ. 21 ஆயிரத்தில் ஆப்பிள் ஐபோன் 13... ஆப்பர்களை அள்ளிவீசும் பிளிப்கார்ட்!


இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், உங்களின் முக்கியமான அரட்டைகளை பாஸ்வேர்டு மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உங்கள் ரகசிய சாட்டிங்கை படிக்கவோ அல்லது செய்தி அனுப்பவோ விரும்பினால், நீங்கள் சாட் லாக்கை திறக்க வேண்டும். இதற்கு, கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் ஐடி அல்லது கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பூட்டலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் அந்த பூட்டை நீங்கள் திறக்கலாம் அல்லது மூடலாம்.


வாட்ஸ்அப்பில் சாட்லாக் உபயோகிப்பது எப்படி?


- உங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
- நீங்கள் லாக் செய்ய விரும்பும் சாட்டிங்கை ஓபன் செய்யவும்
- உதாரணமாக கார்த்திக் என்பவரின் சாட்டிங்கை நீங்கள் லாக் செய்ய விரும்பினால்
- வாட்ஸ்அப்ப்பில் அவருடன் சாட்டிங் செய்த பக்கத்துக்கு செல்லுங்கள்
- பின்னர் அவருடைய புரொபைலை கிளிக் செய்யவும்
- அங்கு Chat Lock ஆப்சன் உங்களுக்கு காட்டும்
- பாஸ்வேர்டு கொடுத்து நீங்கள் அவருடைய சாட்டிங்கை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்


இதன் மூலம் எளிமையாக உங்களின் தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்டிங்கை லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். 


மேலும் படிக்க | 6 மாதம் அன்லிமிடேட் கால்... தினமும் 3 ஜிபி டேட்டா - ஜியோவின் இந்த இலவசத்தை பெற என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ