AI தொழில்நுட்பம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் - பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டுவிடாதீர்கள்
செயற்கை நுண்ணறிவு உலகின் அனைத்து துறைகளிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை சமயோசித்தமாக பயன்படுத்தினால் நிச்சயம் எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடியும்.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மிகப்பெரிய வீச்சை பெற்றிருக்கக்கூடிய செயற்கை தொழில்நுட்ப கருவிகள் என்பது வெறுமனே வீட்டுப்பாடங்களை முடிக்க அல்லது உங்கள் செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களை திருத்துவதற்கான வசதியான வழிகளைக் கொண்ட கருவிகள் மட்டும் அல்ல. நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டால், அவை உங்களின் அடுத்த வருமான ஆதாரமாக இருக்கும். முதலீட்டு நிறுவனமான RSE வென்ச்சர்ஸின் CEO Higgins பேசும்போது, AI ஆனது வரலாற்றில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்குபவராக இருக்கும். ஏனென்றால் நீங்கள் எங்கு பிறந்தீர்கள், உங்களிடம் பணம் இருக்கிறதா, உங்களிடம் PhD இருக்கிறதா என்பதைப் பற்றி செயற்கை நுண்ணறிவு கவலைப்படுவதில்லை. இது செல்வத்தை பெறக்கூடிய ஏணியில் இருக்கும் தடைகளை அழிக்கப் போகிறது. எல்லோருடைய பொருளாதார சுதந்திரம் பற்றிய கனவைத் நிஜமாக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Amazon Prime Day Sale 2023: 5000எம்ஏஎச் பேட்டரி போன் ரூ.5,699க்கு விற்பனை
ChatGPT அல்லது Midjourney போன்ற தற்போதைய ஜெனரேட்டிவ் AI கருவிகளின் வரம்புகளைக் கருத்தில் கொண்டு, இது ஒரு தைரியமான கணிப்பு போல் தோன்றலாம் - ஆனால் PwC இன் சமீபத்திய அறிக்கையின்படி, வரும் பத்தாண்டுகளில் AI சந்தை வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே கிட்டத்தட்ட $100 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2030-க்குள் உலகப் பொருளாதாரத்திற்கு $15.7 டிரில்லியன் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் இப்போது ஏஐ உலகில் குதிக்கவில்லை என்றால், அதன்பிறகு உங்களால் முடியாது என்று ஹிக்கின்ஸ் கூறுகிறார். இப்போதுதான் நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார். வல்லுனர்களின் கூற்றுப்படி, இப்போதே பணம் சம்பாதிக்க AI ஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான இரண்டு வழிகள் இங்கே உள்ளன,
ஃப்ரீலான்ஸ் வேலை
நீங்கள் எழுதுதல், கிராஃபிக் வடிவமைப்பு அல்லது புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்வபவர் என்றால், அந்த திறன்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தி லாபத்தை ஈட்ட AI உங்களுக்கு உதவும். AI பற்றிய உங்கள் அறிவை அதிகரிக்க இதுவே சரியான தருணம் என்று AIandYou-ன் நிறுவனர் மற்றும் CEO, Susan Gonzales கூறுகிறார். இது எல்லா சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு AI திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. விருப்பம் இருந்தால்போதும், வெற்றி பெறலாம். இன்றைய AI கருவிகள் ஏற்கனவே வணிகத் திட்டங்களை எழுத அல்லது டிஜிட்டல் கலைப்படைப்புகளை உருவாக்க உதவுகின்றன. Jasper எனப்படும் AI கருவி ஏற்கனவே பணிப்புத்தகங்கள், மின் புத்தகங்கள் மற்றும் ஆடியோபுக்குகள் போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்க உதவுகிறது.
தொழில்முனைவு
இணைய அணுகல் உள்ள ஒவ்வொரு சிறு வணிக உரிமையாளரும் தங்கள் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க AI எவ்வாறு உதவும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். AI கருவிகள் தங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், சரக்கு நிர்வாகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் நடத்தையை பகுப்பாய்வு செய்யவும் அல்லது போட்டி நுண்ணறிவைப் பெறவும் அவர்களுக்கு உதவும். சிறு வணிகங்கள் தங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர முயற்சிகளை மிகவும் திறம்பட குறிவைக்க AI கருவிகளைப் பயன்படுத்தலாம். புதிய வருவாய் வாய்ப்புகளை அவர்கள் அடையாளம் காண முடியும்.
மேலும் படிக்க | Amazon Prime Day Sale: இதுவரை இல்லாத அட்டகாசமான தள்ளுபடிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ