இன்பாக்ஸில் தேவையில்லாத மெயில்கள் வரமால் தடுப்பது எப்படி?
இன்பாக்சில் தேவையில்லாமல் குப்பை போல் குவிந்து கிடைக்கும் மெயில்களை முழுமையாக நீக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
உங்கள் இன்பாக்சில் அதிகளவில் தேவையில்லாமல் குப்பை போல கொட்டிக்கிடக்கும் மெயில்களை குறைப்பதற்கான விரைவான வழி அவற்றை முழுமையாக நீக்குவதே ஆகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டோரிலிருந்து வரும் மெயில்களை நீக்க விரும்பினால் இன்பாக்சின் தேடுதல் பகுதியில் அந்த கடையின் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தேடி, அதிலிருந்து வந்த அனைத்து மெயில்களையும் நீக்கலாம் அல்லது ட்ராஷ்-க்கு அனுப்பலாம். ட்ராஷ் (Trash) பகுதியில் இருக்கும் மெயில்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும் அல்லது நாமே கூட அதனை செய்யலாம்.
மேலும் படிக்க | இனி GPay-ல் இந்த தொல்லை இருக்காது! பணம் அனுப்ப எளிய வழி!
இவ்வாறு பல மெயில்களை டெலீட் செய்த பிறகும் உங்களது இன்பாக்ஸ் குப்பை நிறைந்திருப்பது போல உங்களுக்கு தோன்றினால் மேலும் சில வழிகளை பின்பற்றலாம். உங்களது இன்பாக்சில் அதிக மெயில்கள் நிறைந்து உங்களுக்கு எரிச்சலூட்டும்படியாக இருந்தாலும், சில சமயம் அதிலுள்ள மெயில்கள் உங்களுக்கு தேவையானதாக இருக்கும். அதனை டெலீட்டும் செய்யக்கூடாது அதே சமயம் உங்களது இன்பாக்சும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. உங்கள் பிரைமரி இன்பாக்சில் உள்ள மெயில்களை ஆர்ச்சிவ் செய்யலாம், இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இன்பாக்சில் மெயில்கள் அதிகமிருக்காது, அதே சமயம் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆர்ச்சிவ் பகுதியில் உள்ள மெயில்களையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
இந்த ஆர்ச்சிவ் பகுதியில் குறிப்பிட்ட ஒருவரது மெயிலையோ அல்லது மொத்த மெயிலையுமோ சேமித்துக்கொள்ளலாம். எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போது அதனை உங்களது இன்பாக்ஸ் பகுதிக்குள் கொண்டு வரலாம். இந்த ஆர்ச்சிவ்-ன் ஐகான் கிட்டத்தட்ட 3டி பேட்டி போல காட்சியளிக்கும், அந்த ஐகான் நடுவில் கீழ்வாக்கில் அம்புக்குறி போடப்பட்டு இருக்கும். அடுத்ததாக ஒரு நிறுவனத்திலிருந்து பெறப்படும் மெயிலைகளை அன்சப்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் தேவையற்ற மெயில்கள் வருவதை தடுக்கலாம். குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஸ்டோரிலிருந்து வந்திருக்கும் மெயிலில் கீழ் பகுதியில் அன்சப்ஸ்க்ரைப் என்கிற ஆப்ஷன் காட்டப்பட்டு இருக்கும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் அன்சப்ஸ்க்ரைப் செய்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் அதில் ஏதேனும் ஒரு காரணத்தை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். இவ்வாறு செய்த பின் அந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து உங்களுக்கு மெயில்கள் எதுவும் வராது. அதேபோல ஒரு தனி நபரிடம் இருந்து வரும் மெயில்களை நீங்கள் தவிர்க்கலாம். அதற்கு நீங்கள் தடுக்க விரும்பும் ஒருவரின் மெயிலை திறந்து, அதன் வலது பக்கத்தில் உள்ள மூன்று-புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும். அதில் பிளாக் ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும், இவ்வாறு செய்தபின் அந்த நபரிடம் இருந்து உங்களுக்கு எப்போதும் மெயில் வராது, மாறாக அந்த மெயில்கள் ஸ்பேமுக்கு சென்றுவிடும்.
மேலும் படிக்க | QR கோடை ஸ்கேன் செய்யவேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR