Twitter Spaces: ரெக்கார்டு செய்வது எப்படி?
பிரபலமான ஆடியோ சாட்டிங் அம்சமாக இருக்கும் டிவிட்டர் ஸ்பேஸை (Twitter Spaces) ஈஸியாக ரெக்கார்டு செய்து, டவுன்லோடு செய்து கொள்ளலாம்
அமெரிக்காவில் பிரபலமான கிளப் ஹவுஸ் செயலியின் ஆடியோ சாட் பிரபலமானவுடன் டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆடியோ சாட்டிங் அம்சத்தை உருவாக்கின. அதனடிப்படையில் டிவிட்டரில் இருக்கும் டிவிட்டர் ஸ்பேஸ் அம்சம், ஒத்தக் கருத்துடைய பலரும் இணைந்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்கிறது.
ALSO READ | பாதி விலைக்கும் குறைவான விலையில் Samsung ஸ்மார்ட் டிவி: Flipkart Sale அதிரடி
மிக குறுகிய காலத்திலேயே பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் டிவிட்டர் ஸ்பேஸில் உரையாடலை பதிவு செய்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். சில முக்கியமான தகவல்களை தவறவிட்டிருந்தால் மீண்டும் அதனை பிளே பேக் செய்து கேட்டுக்கொள்ளக்கூடிய அம்சமும் உண்டு. ஹோஸ்ட் மட்டுமே டிவிட்டர் ஸ்பேஸ்களை பதிவு செய்யக்கூடிய அம்சம் இருந்த நிலையில், டிவிட்டர் யூசர்களும் ஸ்பேஸ் உரையாடல்களை பதிவு செய்துகொள்ளலாம்
டிவிட்டர் ஸ்பேஸ் ரெக்கார்டு செய்வது எப்படி?
1. டிவிட்டர் ஸ்பேஸ் தொடங்கும்போது ரெக்கார்டு ஆப்சனை யூசர்கள் மாற்ற வேண்டும். அப்போது ஸ்பேஸ் ஸ்கிரீனின் மேல்புறத்தில் ரெக்கார்டிங் என்ற ஆப்சன் காண்பிக்கும்
2. பேசுபவர்கள் (Speakers) மட்டுமே ஸ்பேஸ் ரெக்கார்டிங்கில் பதிவு செய்ய அனுமதி கிடைக்கும்.
3. ஸ்பேஸ் (Space) முடிந்ததும், ஸ்பேஸ் பதிவை ட்வீட் மூலம் பகிர்வதற்கான இணைப்பை ஹோஸ்ட் (Host) கொடுப்பார்.
ALSO READ | 6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்
4. பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு, தொடக்க நேரத்தைத் திருத்தம் செய்வதற்கான ஆப்சன் ஹோஸ்டுக்கு இருக்கும். அந்த ஆப்சன் மூலம் ஸ்பேஸ் தொடங்குவதற்கு முன் இருக்கும் சில நிமிடங்களை நீக்கிக் கொள்ளலாம்
5. இப்போது யூசர்கள் ஸ்பேஸ் ரெக்கார்டை கேட்க வேண்டும் என்றால் உங்கள் டைம் லைனில் இருக்கும் ஸ்பேஸ் கார்டில் வைத்து ‘Play Recording’ என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
6. டிவிட்டரில் இருக்கும் ஸ்பேஸ் உரையாடல்களை எப்போது வேண்டுமானாலும் ஹோஸ்டால் டெலிட் செய்ய முடியும்.
7. பதிவு செய்யப்பட்ட அனைத்து ஸ்பேஸ் உரையாடல்களும் 30 முதல் 120 நாட்கள் வரை டிவிட்டர் ஸ்பேஸில் இருக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR