How To Recover Deleted Photos In Mobiles In Tamil: மொபைல் என்பது ஒரு காலத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கு மட்டும்தான் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஸ்மார்ட்போனின் எழுச்சி என்பது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது எனலாம். அந்த வகையில், தற்போது மொபைல் வாங்க முற்படும்போது அனைவரும் எதிர்பார்க்கும் அடிப்படை விஷயம் கேமரா நன்றாக இருக்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அனைவரும் ஸ்மார்ட்போனிலேயே தரமான புகைப்படங்களை எடுத்து தங்களின் நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்கின்றனர் எனலாம். இப்போதெல்லாம், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொபைல்களில் சிறந்த கேமராக்களை வழங்குகின்றன. டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விடவும் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதை மக்கள் விரும்புகின்றனர். 


அப்படி, மொபைல்களில் புகைப்படங்களை எடுத்து சேமித்து வைக்கும்போது, தவறுதலாக சில போட்டோக்களை பலரும் டெலிட் செய்வது உண்டு. அதாவது, மொபைலில் ஸ்டோரேஜ் போதாமையால் இந்த நடவடிக்கைகளில் சிலர் இறங்குவார்கள். அப்படி செய்யும்போது சிலர் தங்களுக்கு முக்கியமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சேர்த்தே டெலீட் செய்வதையும் பார்த்திருப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி கவலையடைவார்கள். அந்த வகையில், டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக மீட்டெடுப்பது எப்படி என்பதை இங்கே காணலாம். ஒருவேளை உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ இப்படி நடந்தால் இதனை செய்யுங்கள்.


மேலும் படிக்க | இதுவரை இல்லாத அளவில்... அதுவும் மலிவு விலையில் ஆப்பிள் வாட்ச் - எவ்வளவு தெரியுமா?


மொபைலில் போட்டோக்கள், வீடியோக்களை மீட்டெடுப்பது எப்படி?


- எல்லா ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் Recylce Bin போன்ற ஒரு போல்டர் இருந்திருக்கும். அங்கு டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சேமிக்கப்படும். அந்த போல்டரில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீட்டெடுக்கலாம்.


- இந்த Bin போல்டர் கேலரியில் காணலாம்.


- மொபைலில் இருந்து டெலீட் செய்யப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் இங்கே காணலாம்.


- நீங்கள் மீட்க விரும்பும் புகைப்படத்தில் கிளிக் செய்து, மீட்டெடுக்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும். இதற்கு பிறகு உங்கள் புகைப்படம் கேலரியை அடையும்.


- புகைப்படம் டெலீட் செய்யப்பட்ட பிறகு 30 நாட்களுக்கு மட்டுமே அதில் இருக்கும். இதற்குப் பிறகு புகைப்படம் மீட்கப்படாமல் போகலாம்.


Google Photos தளத்தில் இந்து படங்களை மீட்டெடுக்கும் முறை


- கூகுள் Photos தளத்தில் புகைப்படங்களை மீட்டெடுக்க, நீங்கள் லைப்ரரி ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
- இங்கே நீங்கள் பல போல்டரை காண்பீர்கள். நீங்கள் Bin விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதை கிளிக் செய்த பிறகு, நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் விரும்பியதை மீட்டெடுக்கலாம்.


மேலும் படிக்க | இந்தாண்டு அதிகமானோரால் விளையாடப்பட்ட டாப் 7 ஆன்லைன் கேம்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ