Apple Watch 8 Series Discount: வாட்ச் வாங்க அனைத்து தரப்பினரும் விருப்பப்படுவார்கள். வாட்ச்சின் பயன்பாடு எதற்கு என்ற கேள்வி எழுந்தபோது, ஸ்மார்ட் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் வாட்ச் சந்தை என்பது தற்போது விரிவடைந்துள்ளது எனலாம். ஸ்மார்ட்போன்கள் போல பல நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பையும் செய்து சந்தையில் முன்னணி வகிக்கின்றன.
அதுவும் தற்போது புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ளது. அனைவரும் தங்களுக்கும் தங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை பரிசாக விரும்புவார்கள். பல நிறுவனங்களில் ஸ்மார்ட் வாட்ச் இருந்தாலும், ஆப்பிள் ஐபோனை போன்று, ஆப்பள் வாட்ச் மீதும் தனி ஈர்ப்பு உண்டு எனலாம்.
ஆனால் இந்த நிறத்திற்கு மட்டுமே தள்ளுபடி
அந்த வகையில், நீங்கள் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலை வாங்க விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செய்தி வந்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (41 மி.மீ.,) மாடலின் விலையை 24 ஆயிரத்து 999 ரூபாய் ஆக குறைத்துள்ளது. இது 21 ஆயிரம் ரூபாய் அல்லது அதன் சில்லறை விலையில் மொத்தம் 45 சதவீதம் தள்ளுபடி ஆகும். இந்த மாடலுக்கு இதுவரை இல்லாத குறைந்த விலை இது என கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு விதிமுறை உள்ளது. இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மிட்நைட் வண்ணம் மட்டுமே தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது, 24 ஆயிரத்து 999 ரூபாயில்.
இந்த வாட்சின் மற்ற நிறங்கள் 41 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (45 மி.,மீ) மாடல் 10 சதவீத தள்ளுபடியில் 41 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. தள்ளுபடி விலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (41 மி.மீ.,) வாங்குவதில் கூடுதல் ஒப்பந்தங்கள் உள்ளன.
மேலும் படிக்க | BSNL-ன் புதிய ரூ.298 திட்டம்: 52 நாட்கள் வேலிடிட்டி + ஈராஸ் நவ் சப்ஸ்கிரிப்ஷன்
கூடுதல் ஆப்பர்கள்
IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான மாதத் தவணை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். Flipkart Pay Later EMI உடன் No Cost EMI வசதியையும், Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது 5 சதவீத கேஷ்பேக் ஆப்பரையும் பிளிப்கார்ட் தளம் வழங்குகிறது. இதன் மூலம் மாதத் தவணை வெறும் 879 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆனது 2022ஆம் ஆண்டில் புதிய உடல் வெப்பநிலை சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல், சீரிஸ் 7 மற்றும் சீரிஸ் 6, எஸ்8 எஸ்ஐபி போன்ற அதே பிராஸஸரை கொண்டுள்ளது.
வாட்ச் சீரிஸ் 8ல் புதிய மோஷன் சென்சார்கள் உள்ளன, அவை கார் விபத்துகளைக் கண்டறிந்து அவசர சேவைகளை அழைக்கின்றன. வாட்ச் சீரிஸ் 8 ஆனது மேம்பட்ட சுழற்சி கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் விபத்து கண்டறிதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது watchOS 10ஐயும் ஆதரிக்கிறது.
மேலும் படிக்க | டெக்னோ பாப் 8: குறைந்த விலையில் நிறைவான அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ